Ennai nEsikkindraya | என்னை நேசிக்கின்றாயா


என்னை  நேசிக்கின்றாயா?     
ennai nEsikkintraayaa      
என்னை  நேசிக்கின்றாயா?     
ennai nesikkintraayaa    
         
  கல்வாரி காட்சியை கண்டபின்னும்
  kalvaari kaatchchiyai kaNda pinnum
  நேசியாமல் இருப்பாயா  -2
  nEsiyaamal iruppaaya -2

பாவத்தின் அகோரத்தைப்  பார்
paavaththin ahOraththai paar
பாதகத்தின் முடிவினைப்  பார்-(2)
paathahaththin mudivinai paar
  பரிகாசச்  சின்னமாய் சிலுவையிலே
  parihaasa sinnamaai siluvaiyilaE
  பலியானேன்  பாவி உனக்காய்-(2) - என்னை 
  baliyaanaEn paavi unakkaai

பாவம் பாரா பரிசுத்தர் நான்
paavam paaraa parisuththar naan
பாசம் பொங்க அழைக்கின்றேன் பார் -(2)
paasam ponga azhaikkintraEn paar
  உன் பாவம் யாவும்  சுமப்பேன் என்றேன்
  un paavam yaavum sumappaEn entraEn
  பாதம் தன்னில் இளைபாற வா-(2) - என்னை 
  paatham thannil iLaippaara vaa 

வானம் பூமி படைத்திருந்தும்
vaanam poomi padaiththirunthum
வாடினேன் உன்னை இழந்ததினால்-(2)
vaadinaEn unnai izhanthathinaal
  தேடி இரட்சிக்க பிதா என்னை அனுப்பிடவே
  thaEdi ratchchikka pithaa ennai anuppidavaE
  ஓடிவந்தேன் மானிடனாய்-(2) - என்னை 
  Odi vanthaEn maanidanaai