YEruhintaar | ஏறுகின்றார்

ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே
yEruhintaar thaLLaadi thavazhnthu kaLaippOdaE
என் இயேசு குருசை சுமந்தே
en yaEsu kurusai sumanthaE
என் நேசர் கொல்கொதா மலையின்மேல் நடந்தே
en nEsar kolkothaa malaiyin mEl nadanthaE
ஏறுகின்றார்
yEruhintaar

கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்கச்
kannaththil avan Ongi adikka
சின்னப் பிள்ளைபோல் ஏங்கி நின்றார்
chinna piLLai pOl yEngi nintaar
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
antha pilaaththum kaiyai kazhuvi
ஆண்டவரை அனுப்புகின்றான் – ஏறுகின்றார் 
aaNdavarai anuppuhintaan 

மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
minjum belaththaal yeetti yeduththaE
நெஞ்சைப் பிளந்தான் ஆ! கொடுமை
nenjai piLanthaan aa kodumai
இரத்தமும் நீரும் ஓடி வருதே
raththamum neerum Odi varuthaE
இரட்சகரை நோக்கியே பார் –ஏறுகின்றார் 
ratchaharai nOkkiyaE paar

இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்ச்
intha paaduhaL unthan vaazhvukkaai
சொந்தப்படுத்தி ஏற்றுக்கொண்டார்
sonthappaduththi yEtrukoNdaar
நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
nEsikkintaayO yEsu naatharai
நேசித்து வா குருசெடுத்தே – ஏறுகின்றார் 
nEsiththu vaa kuruseduththaE

சேவல் கூவிடும் மூன்று வேளையும்
sEval koovidum moontru vELaiyum
சொந்த குருவை மறுதலித்தான்
sontha guruvai maruthaliththaan
ஓடி ஒளியும் பேதுருவையும்
Odi oLiyum pEthuruvaiyum
தேடி அன்பாய் நோக்குகின்றார் – ஏறுகின்றார் 
thaEdi anbaai nOkkuhintaar

பின்னே நடந்த அன்பின் சீஷன்போல்
pinnaE nadantha anbin seeshan pOl
பின்பற்றி வா சிலுவை வரை
pinpatri vaa siluvai varai
காடியைப் போல் கசந்திருக்கும்
kaadiyaip pOl kasanthirukkum
கஷ்டங்களை அவரிடம் சொல் – ஏறுகின்றார் 
kashtangaL avaridam sol

செட்டைகளின் கீழ் சேர்த்தனைத்திடும்
settaihaLin keezh sErththaNaiththidum
சொந்தத் தாயின் அன்பிதுவே
sontha thaayin anbithuvaE
எருசலமே! எருசலமே!
yerusalEmaE yerusalEmaE
என்றழுதார் கண் கலங்க – ஏறுகின்றார் 
yentrazhuthaar kaN kalanga