Ekkaalaththum karthar yEsuvai | எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை

எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை 
ekkaalaththum karthar yEsuvai
எந்தன் துணையாய் ஏற்றிடுவேனே -2
enthan thuNaiyaai yEtriduvEnaE
 உயர்வோ தாழ்வோ எந்நிலையோ 
 uyarvO thaazhvO ennilaiyO
 எந்தன் தஞ்சம் இயேசுவே -2
 enthan thanjam yEsuvaE

மண்ணின் வாழ்வும் மாயையாகும் 
maNNin vazhvum maayai yaahum
மனிதன் காண்பது பொய்யாகும் -2
manithan kaaNbathu poiyaahum
  மாறிடா நேசர் இயேசுவே -2
  maaridaa nEsar yEsuvaE
மாறாத அன்பு என்றும் போதுமே -எக்காலத்தும் 
maaraatha anbu entrum pOthumaE

அலைகள் மோதி எதிர் வந்தாலும் 
alaihaL mOthi yethir vanthaalum
கலங்கிடேனே வாழ்க்கையிலே -2
kalangidEnaE vaazhkaiyilaE
  அசையா எந்தன் நம்பிக்கை -2
  asaiyaa enthan nambikkai
நங்கூரம் எந்தன்  இயேசு போதுமே -எக்காலத்தும் 
nangkkoram enthan yEsu pOthumaE

அவரை நோக்கி ஜெபிக்கும் போது 
avarai nOkki jebikkum pOthu
அருகில் வந்து உதவி செய்வார் -2
aruhil vanthu uthavi seiyvaar
  கைவிடாமல் கருத்துடன் -2
  kaividaamal karuththudan
காத்தென்னை என்றும் நடத்திடுவார் -எக்காலத்தும் 
kaaththennai entrum nadaththiduvaar

தேவ பயமே ஜீவ ஊற்று 
dEva bayamaE jeeva ootru
மரண கண்ணிக்கு விலக்கிடுமே -2
maraNa kaNNikku vilakkidumaE
  தேவ பாதையில் நடந்திட -2
  dEva paathaiyil nadanthida
தேவாவியானவர் உதவி செய்வார்  -எக்காலத்தும் 
dEvaaviyaanavar uthavi seiyvaar

முன்னறிந்து அழைத்த தேவன் 
munnarinthu azhaitha dEvan
முடிவு வரையும் நடத்திடுவார் -2
mudivu varaiyum nadaththiduvaar
  தேவ சாயலாய் மாறியே -2
  dEva saayalaai maariyaE
தேவாதி தேவனை தரிசிப்போமே -எக்காலத்தும் 
dEvaathi dEvanai tharisippOmaE