Um paatham paNinthaEn | உம் பாதம் பணிந்தேன்

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
um paatham paNinthaEn ennaaLum thuthiyaE
உம்மையன்றி யாரைப் பாடுவேன் – இயேசய்யா 
ummaiyantri yaaraip paaduvaEn -yEsaiyya
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே
unthan anbu uLLam ponguthaE

பரிசுத்தமே பரவசமே
parisuththamaE paravasamaE
பரனே சருளே பரம் பொருளே -2
paranaE saruLaE param poruLaE
 தேடினதால் கண்டடைந்தேன்
 thEdinathaal kaNdadainthaEn
 பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் -2— உம்பாதம்
 paadida paadalhaL yeenthaLiththeer 

புது எண்ணெய்யால் புது பெலத்தால்
puthu yeNNaiyaal puthu belaththaal
புதிய கிருபை புது கவியால் -2
puthiya kirubai puthu kaviyaal
 நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
 nirappi nitham nadaththuhintreer
 நூதன சாலேமில் சேர்த்திடுவீர் -2— உம்பாதம்
 noothana saalEmil sErththiduveer

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
nerukkaththilaE ummai azhaiththaEn
நெருங்கி உதவி எனக்களித்தீர் -2
nerungi uthavi yenakkaLiththeer
 திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
 thisaik kettengum alainthidaamal
 தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் -2— உம்பாதம்
 theeviram vanthennai thaanguhinteer

என் முன் செல்லும் உம் சமூகம்
en mun sellum um samuham
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல் -2
enakku aLikkum iLaippaaruthal
 உமது கோலும் உம் தடியும்
 umathu kOlum um thadiyum
 உண்மையாய் என்னையும் தேற்றிடுதே -2— உம்பாதம்
 uNmaiyaai ennaiyum thEtriduthaE 

கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
kanichedi neer nilaiththirukkum
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க -2
kodiyaai adiyaEn padarnthilanga
 கிளை நறுக்கிக் களை பிடுங்கி
 kiLai narukki kaLai pidungi
 கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் -2— உம்பாதம்
 kartharaE kaaththennai suththam seiytheer