Um peedaththai sutri sutri naan | உம் பீடத்தை சுற்றிச் சுற்றி நான்

உம் பீடத்தை சுற்றிச் சுற்றி நான்
um peedaththai sutri sutri
வருகிறேன் தெய்வமே -2
varuhiraEn deivamaE
 கறைகளெல்லாம் நீங்கிட
 karaihaLellaam neengida
 என் கைகளைக் கழுவுகிறேன் -2
 en kaihaLai kazhuvuhiraEn

என் தெய்வமே.. இயேசு நாதா..
en deivamaE.. yEsu naatha..
இதயமெல்லாம் ..மகிழுதையா..
idhayamellaam.. mahizhuthaiyaa

உரத்த குரலில் நன்றிப் பாடல்
uraththa kuralil nantri paadal
பாடி மகிழ்கிறேன் -2
paadi mahizhhintraEn
 வியத்தகு உம் செயல்களெல்லாம்
 viyaththagu um seyalhaLellam
 எடுத்து உரைக்கிறேன் -2 -என் தெய்வமே
 yeduththu uraikkintraEn

உந்தன் மாறாத பேரன்பு
unthan maaraatha pEranbu
என் கண்முன் இருக்கிறது -2
en kaNmun irukkirathu
 உம் திருமுன்னே உண்மையாக
 um thiru munnaE uNmaiyaaha
 வாழ்ந்து வருகிறேன் -2-என் தெய்வமே
 vaazhnthu varuhintraEn

கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்
karthaavaE ummaiyaE nambiyuLLaEn
தடுமாற்றம் எனக்கில்லை -2
thadumaatram enakkillai
 உந்தன் சமூகம் உந்தன் மகிமை
 unthan samooham unthan mahimai
 உண்மையாய் ஏங்குகின்றேன் -2-என் தெய்வமே
  uNmaiyaai yEnguhintraEn