Ummai naadi thEdum manithar | உம்மை நாடித் தேடும் மனிதர்

உம்மை நாடித் தேடும் மனிதர்
ummai naadi thEdum manithar
உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும் -2
ummil mahizhnthu kaLikoorattum
 உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்
 unthan meetpil naattam koLvOr
 மன அமைதி இன்று பெறட்டும் -2
 mana amaithi intru perattum

மகிமை மாட்சிமை, 
mahimai maatchimai 
மாவேந்தன் உமக்கே -2
maa vEnthan umakkaE
 துதியும் கனமும் 
 thuthiyum ganamum 
 தூயோனே உமக்கே -2
 thooyOnaE umakkaE

ஒரு நாளும் உம்மை மறவேன்
oru naaLum ummai maravaEn
ஒரு போதும் உம்மை பிரியேன் -2
oru pOthum ummai piriyaEn
 மறு வாழ்வு தந்த நேசர்
 maru vaazhvu thantha nEsar
 மணவாளன் மடியில் சாய்ந்தேன் -2 -மகிமை
 maNavaaLan madiyil saainthaEn

என் பார்வை சிந்தை எல்லாம்
en paarvai sinthai ellaam
நீர் காட்டும் பாதையில் தான் -2
neer kaattum paathaiyil thaan
 என் சொல்லும் செயலும் எல்லாம்
 en sollum seyalum ellaam
 உம் சித்தம் செய்வதில் தான் -2-மகிமை
 um siththam seiyvathil thaan

உந்தன் வேதம் எனது உணவு
unthan vEtham enathu uNavu
நன்றி கீதம் இரவின் கனவு -2
nantri keetham iravin kanavu
 உந்தன் பாதம் போதும் எனக்கு
 unthan paatham pOthum enakku
 அதுதானே அணையா விளக்கு -2-மகிமை
 athu thaanaE aNaiyaa viLakku

உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
ummai varuththum vazhiyil nadanthaal
என்னைத் திருத்த வேண்டும் தேவா -2
ennai thiruththa vENdum dEva 
 கருத்தோடு உமது வசனம்
 karuththOdu umathu vasanam
 கற்றுத்தந்து நடத்த வேண்டும் -2-மகிமை
 katru thanthu nadaththa vENdum