Unga kirubai illaama | உங்க கிருபை இல்லாம

உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா 
unga kirubai illaama vaazha mudiyaathaiyaa
உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா 
unga kirubai illaama vaazha theriyaathaiyaa
நான் நிற்பதும் உங்க கிருபை தான்
naan nirpathum unga kirubai thaan
நான் நிலைப்பதும் உங்க கிருபை தான்
naan nilaippathum unga kirubai thaan
நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா 
naan nirpathum nilaippathum unga kirubai thaanappaa

உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா 
unga kirubai illaama vaazha mudiyaathaiyaa
  முடியாதப்பா வாழ தெரியாதப்பா  -2 -உங்க கிருபை
  mudiyaathappaa vaazha theriyaathappaa

காலையில் எழுந்தவுடன் புது கிருபை தாங்குது
kaalaiyil ezhunthavudan puthu kirubai thaanguthu
வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது  -2
vaazh naaL muzhuvathum mahizhchchikkuLLaE nadaththuthu
  நிர்மூலமாகாமலே ..இதுவரை காத்தீர் ஐயா..
  nirmoolamaahaamalaE.. ithu varai kaaththeer iyya
  பெலவீன நேரங்களில் 
  belaveena nErangaLil 
  உம் கிருபை தாங்கினதய்யா
  um kirubai thaanginathaiyaa

என் அரணும்  என் கோட்டையே 
en araNum en kOttaiyaE
உயர்ந்த அடைக்கலம் நீரே  -2-உங்க கிருபை
uyarntha adaikkalam neeraE

உமது கிருபையினால் சத்துருக்களை அழித்திடுவீர்,
umathu kirubaiyinaal saththurukkaLai azhiththiduveer
ஆத்துமாவை சஞ்சலப்படுத்தும் யாவரையும் சங்கரிப்பீர் -2
aaththumaavai sanjalappaduththum yaavaraiyum sangarippeer
  உமது அடிமை நான் ஐயா.. எனது தெய்வம் நீர் ஐயா..
  umathu adimai naan iyyaa ..enathu deivam neer iyyaa
  நான் நம்பும் கேடகம் நீரே 
  naan nambum kEdaham neeraE
  எனது கோட்டை நீர் ஐயா 
  enathu kOttai neer iyyaa

என் கோட்டை என் துருகம்
en kOttai en thuruham
நான் நம்பும் கேடகம் நீரே – உங்க கிருபை
naan nambum kEdaham neeraE

எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நானும் போவதில்லை
eppakkam nerukkappattum odungi naanum pOvathillai
கிருபை மேல் கிருபை தந்து கால் ஊன்றி நடக்க செய்தீர் -2
kirubai mEl kirubai thanthu kaal oontri nadakka seiytheer
  மான்களின் கால்களை போல.. பெலனாய் ஓட செய்தீரே
  maanhaLin kaalhaLai pOla.. belanaai Oda seiytheeraE
  உயர்ந்த ஸ்தலங்களில் என்னை 
  uyarntha sthalangaLil ennai
  திடனாய் நடக்க செய்தீரே
  thidanaai nadakka seiytheeraE

என் அரணும் என் கோட்டையே 
en araNum kOttai
உயர்ந்த அடைக்கலம் நீரே – உங்க கிருபை..
uyarntha adaikkalam neeraE