UyiruLLa thirupaliyaai | உயிருள்ள திருப்பலியாய்

உயிருள்ள திருப்பலியாய்
uyiruLLa thiru paliyaai
உடலைப் படைக்கின்றேன்
udalai padaikkintraEn
உள்ளம் தந்துவிட்டேன்
uLLam thanthu vittaEn

தகப்பனே தந்துவிட்டேன்
thahappanaE thanthu vittaEn
தங்கிவிடும் நிரந்தரமாய் – 2 -உயிருள்ள
thangi vidum nirantharamaai

உலகப்போக்கில் நடப்பதில்லை
ulahap pOkkil nadappathillai
ஒத்த வேஷம் தரிப்பதில்லை – 2
oththa vEsham tharippathillai
  என் மனம் புதிதாக வேண்டும்
  en manam puthithaaha vENdum
  திருச்சித்தம் புரிந்து வாழ வேண்டும் – 2 -தகப்பனே 
  thiruch chiththam purinthu vaazha vENdum

உள்ளத்தின் நினைவுகள் உமக்கு
uLLaththin ninaivuhaL umakku
உகந்தனவாய் இருப்பதாக – 2
uhanthanavaai iruppathaaha
  நாவின் சொற்கள் எல்லாம்
  naavin sorkaL ellaam
  ஏற்றனவாய் இருப்பதாக – 2 -தகப்பனே 
  yEtranavaai iruppathaaha

எண்ணங்கள் ஏக்கங்கள் உமதாகணும்
eNNangaL yEkkangaL umathaahaNum
இன்னும் அதிகமாய் நேசிக்கணும் – 2
innum athihamaai nEsikkaNum
  உன்னதர் பணி செய்ய வேண்டும்
  unnathar paNi seiyya vENdum
  என் உயிர் இருக்கும் வரை – 2 
  en uyir irukkum varai

உமக்கே நான் சொந்தம் 
umakkaE naan sontham
உம்மோடு நான் வாழ்வேன் 
ummOdu naan vaazhvEn
உயிர் வாழும் நாட்களெல்லாம் 
uyir vaazhum naatkaLellaam

உம் சித்தம் செய்திடுவேன்  --தகப்பனே 
um siththam seiythiduvEn