Vallamaiyin aaviyaanavar | வல்லமையின் ஆவியானவர்

வல்லமையின் ஆவியானவர்
vallamaiyin aaviyaanavar
என்னுள் வந்துவிட்ட காரணத்தினால்
ennuL vanthu vitta kaaraNaththinaal      (2)
பொல்லாத சாத்தானை – ஒரு
pollaatha saaththaanai -oru
சொல்லாலே விரட்டி விட்டேன்
sollaalaE viratti vittaEn

Power ஆவி எனக்குள்ளே-அந்த 
power aavi enakkuLLaE -antha
பய ஆவி அணுகுவதில்லை -2
baya aavi aNukuvathillai
 அன்பின் ஆவி எனக்குள்ளே -நான் 
 anbin aavi enakkuLLaE -naan
 அகற்றிவிட்டேன் கசப்புகளை -2 -வல்லமையின் 
  ahatrivittaEn kasappukaLai

கட்டுப்பாட்டின் ஆவியானவர்
kattuppaattin aaviyaanavar
என்னை Control பண்ணி நடத்துகிறார் -2
ennai control paNNi nadaththukiraar
 இஷ்டம் போல அலைவதில்லை
 ishttam pOla alaivathillai
 அவர் சித்தம் செய்து வாழ்பவன் நான் -2-வல்லமையின் 
 avar siththam seiythu vaazhbavan naan

கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான்
kiristhuvukkuL narumaNam naan
தெருத்தெருவா மணம் வீசுவேன் -2
theruth theruvaa maNam veesuvaEn
 மீட்பு பெறும் அனைவருக்கும் -நான்
 meetpu perum anaivarukkum -naan
 வாழ்வளிக்கும் வாசனையாவேன்-2-வல்லமையின் 
 vaahvazhikkum vaasanaiyaavaEn

உலகத்திற்கு வெளிச்சம் நான்
ulahaththirku veLichcham naan
இந்த ஊரெல்லாம் டார்ச் அடிப்பேன் -2
intha oorellaam torch adippaEn
 உப்பாக பரவிடுவேன் – நான்
 uppaaha parava viduvaEn -naan
 எப்போதும் சுவை தருவேன் -2-வல்லமையின் 
 eppOthum suvai tharuvaEn

கர்த்தரின் முத்திரை என் மேல் – நான்
karththarin muththirai en mEl -naan
முற்றிலும் அவருக்குச் சொந்தம் -2
mutrilum avarukku sontham
 அச்சாரமாய் ஆவியானவர் – நான்
 achchaaramaai aaviyaanavar -naan
 நிச்சயமாய் மீட்பு பெறுவேன் -2-வல்லமையின் 
 nichchayamaai neetpu peruvaEn

தேவனாலே பிறந்தவன் நான்
dEvanaalaE piranthavan naan
எந்த பாவமும் செய்வதில்லை -2
entha paavamum seiyvathillai
 கர்த்தரே பாதுகாக்கிறார்
 karththaraE paathukaakkiraar
 தீயோன் என்னை தீண்டுவதில்லை -2-வல்லமையின் 
 theeyOm ennai theeNduvathillai