Yutham seiyvOm vaarum | யுத்தம் செய்வோம் வாரும்

யுத்தம் செய்வோம் வாரும் கிறிஸ்து வீரரே!
yuththam seiyvOm vaarum kiristhu veeraraE
இயேசு சேனைக் கர்த்தர் பின்னே செல்வோமே!
yEsu sEnai karththar pinnaE selvOmaE
வெற்றி வேந்தராக முன்னே போகிறார்
vetri vEntharaaha munnaE pOhiraar
ஜெயக்கொடி ஏற்றி போர் நடத்துவார்
jeya kodi yEtri pOr nadaththuvaar

யுத்தம் செய்வோம் வாரும் 
yuththam seiyvOm vaarum
கிறிஸ்து வீரரே!
kiristhu veeraraE
இயேசு சேனைக் கர்த்தர் 
yEsu sEnai karththar
பின்னே செல்வோமே!
pinnaE selvOmaE

கிறிஸ்து வீரர்கள் நீர் வெல்ல முயலும்
kristhu veerarhaL neer vella muyalum
பின்னிடாமல் நின்று ஆரவாரியும்!
pinnidaamal nintru aaravaariyum
சாத்தான் கூட்டம் அந்த தொனிக்கதிரும்
saaththaan koottam antha thonikkatharum
நரகஸ்திபாரம் அஞ்சி அசையும் -யுத்தம் 
narahasthipaaram anji asaiyum

கிறிஸ்து சபை வல்ல சேனை போன்றதாம்
kirisththu sabai valla sEnai pOntrathaam
பக்தர் சென்ற பாதை செல்கின்றோமே நாம்!
bakthar sentra paathai selhintrOmaE naam
கிறிஸ்து தாசர் யாரும் ஓர் சரீரமே
kiristhu thaasar yaarum Or sareeramaE
விசுவாசம் அன்பு நம்பிக்கை ஒன்றே! -யுத்தம் 
visuvaasam anbu nambikkai ontraE

கிரீடம் இராஜ மேன்மை யாவும் சிதையும்
kreedam raaja mEnmai yaavum sithaiyum
கிறிஸ்து சபைதானே என்றும் நிலைக்கும்!
kristhu sabai thaanaE entrum nilaikkum
நரகத்தின் வாசல் ஜெயங் கொள்ளாதே
narahaththin vaasal jeyang koLLaathaE
என்ற திவ்விய வாக்கு வீணாய்ப் போகாதே! -யுத்தம் 
entra thivya vaakku veeNaaip pOhaathaE

பக்தரே ஒன்றாக கூட்டம் கூடுமேன்
baktharaE ontraaha koottam koodumaEn
எங்களோடு சேர்ந்து ஆர்ப்பரியுமேன்!
engaLOdu sErnthu aarppariyumaEn
விண்ணோர் மண்ணோர் கூட்டம் இயேசு ராயர்க்கே!
viNNOr maNNOr koottam yEsu raayarkkaE
கீர்த்தி  புகழ் மேன்மை என்றும் பாடுமே!-யுத்தம் 
keerththi puhazh mEnmai entrum paadumaE