Anudhinamum ummil naan vaLarnthidavaE | அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே

அனுதினமும் உம்மில்  நான் வளர்ந்திடவே
Anudhinamum ummil naan vaLarnthidavaE
உம் அநுக்கிரகம்  தரவேண்டுமே -2
um anukiraham thara vENdumaE

என்னால் ஒன்றும் கூடாதையா
ennaal ontrum koodaathaiyaa
எல்லாம் உம்மால் கூடும் -2 -அனுதினமும் 
ellaam ummaal koodum

என் ஞானம் கல்வி செல்வங்கள் எல்லாம்
en gnanam kalvi selvangaL ellaam
ஒன்றுமில்லை குப்பை என்றெண்ணுகிறேன் -2
ontrumillai kuppai entreNNuhiraEn
  என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை
  en neethi niyaayangaL azhukkaana kanthai
  என்றே உணர்ந்தேன் என் இயேசுவே — அனுதினமும்
  entraE uNarnthaEn en yEsuvaE -anuthinamum

அழைத்தவரே உம்மில்  பிழைத்திடவே
azhaiththavaraE ummil pizhaiththidavaE
அவனியில் உமக்காய் உழைத்திடவே -2
avaniyil umakkaai uzhaiththidavaE
  அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்றே 
  arpaNikkintraEn ennai intraE
  ஏற்றுக் கொள்ளும் என் இயேசுவே — அனுதினமும்
  yEtrukkoLLu en yEsuvaE