PaaduvaEn koNdaaduvaEn | பாடுவேன் கொண்டாடுவேன்

பாடுவேன் கொண்டாடுவேன் 
paaduvaEn koNdaaduvaEn
இயேசு பிறந்தார் என் வாழ்விலே -2
yEsu piranthaar en vaazhvilaE
  என் பாவங்கள் போக்கிடவே 
  en paavangaL pOkkidavaE
  என் வாழ்வினை மாற்றிடவே -2
  en vaazhvinai maatridavaE

நன்றி நன்றி..நன்றி நன்றி 
nantri nantri.. nantri nantri
இயேசுவே நன்றி -2
yesuvaE nantri

விண்ணை விட்டு மண்ணில் வந்தீர் 
viNNai vittu maNNil vantheer
என்னை சொந்தமாக்க                   (2)
ennai sonthamaakka
சொந்த இரத்தம் சிந்தி சென்றீர் 
sontha raththam sinthi senteer
என்னை மீட்டெடுக்க 
ennai meettedukka

நீர் அதிசயமானவரே 
neer athisayamaanavaraE
ஆலோசனைக் கர்த்தரே 
aalOsanaik karththaraE
சமாதான பிரபுவே 
samaathaana pirabuvaE
இம்மானுவேலரே  -நன்றி 
immaanuvElaraE

என்னில் என்ன கண்டீர் ஐயா 
ennil enna kaNdeer iyya
உந்தன் ஜீவனைத் தந்திடவே              (2)
unthan jeevanai thanthidavaE
பாவி என்மேல் எவ்வளவன்பு 
paavi en mEl evvaLavanbu
சொல்லி முடியாதே 
solli mudiyaathaE

அன்பின் அகலம் ஆழம் நீளம் உயரம்
anbin ahalam aazham uyaram
அளக்க முடியாதே 
aLakka mudiyaathaE
அன்பின் உருவாய் வந்தீரே 
anbin uruvaai vantheeraE
அன்பின் இயேசுவே -நன்றி 
anbin yEsuvaE

அன்பே அழகே என் இயேசுவே 
anbaE azhahaE en yEsuvaE
எந்தன் உயிர் மூச்சே                     (2)
enthan uyir moochchaE
என்னில் வாழ சித்தம் வைத்து 
ennil vaazha siththam vaiththu
பரிசுத்த ஆவியைத் தந்தீரே 
parisuththa aaviyai thantheeraE

என்னைத் தேடி வந்தவரே 
ennai thedi vanthavaraE
என்னைத் தெரிந்து கொண்டவரே 
ennai therinthu koNdavaraE
தாயைப் போல அணைப்பவரே 
thaayai pOla aNaippavaraE
தந்தை போல என்னை தேற்றினீரே -நன்றி 
thanthai pOla ennai thEtrineeraE