RaajanaE um varuhaikkaana | இராஜனே உம் வருகைக்கான

ராஜனே உம் வருகைக்கான
raajanaE um varuhaikaana
காலக்குறிகள் தெரிகின்றன
kaalak kurihaL therihintrana
இயேசுவே! நீர் வரும்போது
yEsuvaE neer varum pOthu
விழித்திருந்தவர்கள்....
vizhiththirunthavarhaL
கொடுத்து வைத்தவர்கள்
koduththu vaiththavarhaL
  வாரும் இயேசு வாரும்
  vaarum yesu vaarum
  வாரும் விரைந்து வாரும் -2
  vaarum virainthu vaarum
   
மரித்து உயிர்த்தவர் இன்று வருகின்றார்
mariththu uyirththavar intru varuhintaar
என்ற நினைவுடன் தாபரிப்போம்! -2
entra ninaivudan thaaparippOm
  மங்கள நாள் விடியும் காலை
  mangaLa naaL vidiyum kaalai
  ஏங்கும் கன்னியாய் காத்திருப்போம்! -2 -இராஜனே
  yEngum kanniyaai kaaththiruppOm
  
செல்வம் எங்கோ உள்ளம் அங்கே
selvam angO uLLam angaE
என்ற உண்மையை மனதில் கொள்வோமே! -2
entra uNmaiyai manathil koLvOmaE
  விண்ணுக்குரிய மகிமை வாழ்வை
  viNNukkuriya mahimai vaazhvai
  மண்ணிலே நாம் நடத்தி முடிப்போம்! -2 -இராஜனே
  maNNilaE naam nadaththi mudippOm
   
மயக்கும் உலகம் அமிழ்த்தும் மோகம்
mayakkum ulaham amizhththum mOham
எதிரியவனின் பொறிகள் என்போம்! -2
yethiriyavanin porihaL enbOm
  விழித்து எதிர்த்தும் விலகி வாழ்ந்தும்
  vizhiththu yethirththum vilahi vaazhnthum
  வஞ்சகன் மேல் வெற்றி பெறுவோம்! -2 -இராஜனே
  vanjahan mEl vetri peruvOm
    
தூய உள்ளம் தூய சிந்தை
thooya uLLam thooya sinthai
காலமெல்லாம் அணிந்திருப்போம்! -2
kaalamellaam aNinthiruppOm
  ஜோதிமங்காமல் வாழ்ந்திருந்து
  jOthi mangaamal vaahnthirunthu
  தேவ இராஜ்ஜியம் பெருக உழைப்போம்! -2
  dEva raajjiyam  peruha uzhaippOm

உண்மையோடு கடமை முடித்தோர்
uNmaiyOdu kadamai mudiththOr
இன்றும் என்றும் உயர்த்தப்படுவார்! -2
intrum entrum uyarththappaduvaar
  ஜெபித்தும் உழைத்தும் சிலுவை சுமந்தோர்
  jebiththum uzhaiththum siluvai sumanthOr
  தேவ வருகையில் பலனடைவார்! -2 -இராஜனே
  dEva varuhaiyil palanadaivaar