sEnaihaLin karththar nallavaraE | சேனைகளின் கர்த்தர் நல்லவரே

சேனைகளின் கர்த்தர் நல்லவரே 
sEnaihaLin karththar nallavaraE
சேதமின்றி நம்மை காப்பவரே  -2
sEthamintri nammai kaappavaraE
  சோர்ந்திடும் வேளைகள் தேற்றிடும் வாக்குகள் 
  sOrnthidum vELaihaL thEtridum vaakkuhaL
  சோதனை வென்றிட தந்தருள்வார் -2
  sOthanai ventrida thantharuLvaar

எக்காலத்தும் நம்பிடுவோம் 
ekkaalaththum nambiduvOm
திக்கற்ற மக்களின் மறைவிடம் 
thikkatra makkaLin maraividam
  பக்க பலம் பாதுகாப்பும் 
  pakka palam paathukaappum
  இக்கட்டில் இயேசுவே அடைக்கலம்  -2
  ikkattil yEsuvaE adaikkalam

வெள்ளங்கள் புரண்டு மோதினாலும் 
veLLangaL puraNdu mOthinaalum
உள்ளத்தில் உறுதி அசையாதே -2
uLLaththil uruthi asaiyaathaE
  ஏழு மடங்கு நெருப்பின் நடுவிலும் 
  yEzhu madangu neruppin naduvilum
  இயேசு நம்மோடங்கு நடக்கிறார் -2
  yEsu nammOdangu nadakkiraar

ஆழத்தினின்றும் நாம் கூப்பிடுவோம் 
aazhaththinintrum naam kooppiduvOm
ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார்  -2
aaththiramaai vanthu thappuvippaar
  கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும் 
  kappalin pinnaNi niththirai seiythidum
  கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன் -2
  karththar nammOduNdu kavalai yEn 

இயேசு நம் யுத்தங்கள் நடத்துவார் 
yEsu nam yuththangaL nadaththuvaar
ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடி -2
yEtriduvOm entrum jeyakkodi
  யாவையும் ஜெயித்து வானத்தில் பறந்து  
  yaavaiyum jeyiththu vaanaththil paranthu
  இயேசுவை சந்தித்து ஆனந்திப்போம் -2
  yEsuvai santhiththu aananthippOm