sthOththarippaEn sthOththarippaEn yEsu dEvanai | ஸ்தோத்தரிப்பேன், ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை

ஸ்தோத்தரிப்பேன், ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை -2
sthOththarippaEn sthOththarippaEn yEsu dEvanai
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேன் நான் 
en jeevanuLLa natkaLellaam sthOththarippaEn naan

உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியை -2
uthaduhaLin kaniyaahiya sthOththira paliyai
 இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகின்றேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்
 yesuvin naamaththinaalaE seluththuhintraEn yaan

பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாக -2
paavak karai neenga ennai mutrilumaaha
 உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே – ஸ்தோத்தரிப்பேன்
 um suththamuLLa raththaththirkuL thOiththathinaalaE

என்னுடைய நோய்களை உம் காயங்களாலே -2
ennudaiya nOihaLai um kaayangaLaalaE
 என்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்
 entraikkumaai theerththathinaal sthOththarippaEn yaan

ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் தேவன் -2
aahaayaththu patchihaLai pOshikkum dEvan
 தினமும் என்னைப் போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்
 thinamum ennai pOshippathaal sthOththarippaEn yaan

நாளைத்தினம் ஊன் உடைக்காய் என் சிந்தைகளை -2
naaLaiththinam oon udaikkaai en sinthaihaLai
 கவலையற்றதாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்
 kavalaiyatrathaakkinathaal sthOththarippaEn yaan

சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனைச் -2
seekkiramaai vanthiduvaEn entruraiththOnai
 சீக்கிரமாய்க் காண்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்
 seekkiramaai kaaNpathinaal sthOththarippaEn yaan