Naan unnai vittu vilahuvathillai | நான் உன்னைவிட்டு விலகுவதில்லை

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
naan unnai vittu vilahuvathillai
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை -2
naan unnai entrum kaividuvathillai
  நான் உன்னைக் காண்கின்ற தேவன்
  naan unnai kaaNhintra dEvan
  கண்மணி போல் உன்னைக் காப்பேன்  -2 -நான் 
  kaNmaNi pOl unnai kaappaEn

பயப்படாதே நீ மனமே – நான்
bayappadaathaE nee manamaE -naan
காத்திடுவேன் உன்னை தினமே -2
kaaththiduvaEn unnai thinamaE
  அற்புதங்கள் நான் செய்திடுவேன் -2
  arputhangaL naan seiythiduvaEn
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் -2 -நான் 
unnai athisayamaai naan nadaththiduvaEn

திகையாதே கலங்காதே மனமே – நான்
thihaiyaathaE kalangaathaE manamaE -naan
உன்னுடனிருக்க பயமேன் -2
unnudanirukka bayamaEn
  கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் -2
  kaNNeer yaavaiyum thudaiththiduvaEn
கவலைகள் யாவையும் போக்கிடுவேன் -2 -நான் 
kavalaihaL yaavaiyum pOkkiduvaEn

அனுதினம் என்னைத் தேடிடுவாய்-நான்
anudhinam ennai thEdiduvaai -naan
அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய் -2
aLiththidum belanaip petriduvaai
  அத்திமரம் போல் செழித்திடுவாய்  -2 
  aththimaram pOl sezhiththiduvaai 
நான் ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய் -2
naan aasaiyaai uNNa kani koduppaai

நீதியின் வலக்கரத்தாலே -உன்னை
neethiyin valakkaraththaalaE -unnai
தாங்குவேன் நான் அன்பினாலே -2
thaanguvaEn naan anbinaalaE
  ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய் -2
  aaviyil uNmaiyaai jebiththiduvaai
தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய் -2 -நான் 
thinam allEluyah entraE aarpparippaai