Nee illaatha naaLellaam | நீ இல்லாத நாளெல்லாம்

நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
nee illaatha naaLellaam naaLaahumaa
நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா -2
nee illaatha vaazhvellaam vaazhvaahumaa

உயிரின் ஊற்றே நீ ஆவாய்
uyirin ootraE nee aavaai
உண்மையின் வழியே நீ ஆவாய் -2
uNmaiyin vazhiyaE nee aavaai
  உறவின் பிறப்பே நீ ஆவாய்
  uravin pirappaE nee aavaai
  உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய் -2
  uLLaththin mahizhvaE nee aavaai

எனது ஆற்றலும் நீ ஆவாய்
enathu aatralum nee aavaai
எனது வலிமையும் நீ ஆவாய் -2
enathu valimaiyum nee aavaai
  எனது அரணும் நீ ஆவாய்
  enathu araNum nee aavaai
  எனது கோட்டையும் நீ ஆவாய் -2
  enathu kOttaiyum nee aavaai

எனது நினைவும் நீ ஆவாய்
enathu ninaivum nee aavaai
எனது மொழியும் நீ ஆவாய் -2
enathu mozhiyum nee aavaai
  எனது மீட்பும் நீ ஆவாய்
  enathu meetpum nee aavaai
  எனது உயிர்ப்பும் நீ ஆவாய் -2
  enathu uyirppum nee aavaai