Pani pozhihirathu | பனி பொழிகிறது

பனி பொழிகிறது மெய் சிலிர்க்கிறது 
pani pozhihirathu mei silirkkirathu
நெஞ்சில் ஆனந்த மத்தாப்பு தெரிக்கிறது -2
nenjil aanantha maththaappu therikkirathu
  இனிக்கும் மார்கழி பூபாளம் பாடுது 
  inikkum maarkazhi poopaazham paaduthu
  கிறிஸ்துமஸ் வரவை சொல்லாமல் சொல்கிறது 
  Christmas varavai sollaamal solhirathu
  கிறிஸ்து ஜனனம் சொன்னாலும் இனிக்கிறது 
  kiristhu jananam sonnaalum ninikkirathu

தூதருக்கிணையாய்ப் பாடுங்கள் 
thootharukkiNaiyaai paadungaL
சுந்தரத் தமிழால் போற்றுங்கள் -2
sunthara thamizhaal pOtrungaL
  இறையாட்சி விடிந்ததை கூறுங்கள் 
  iraiyaatchi vidinthathi koorungaL
  ஆடுங்கள் பாடுங்கள் அவனியோர் அறிந்திட 
  aadungaL paadungaL avaniyOr arinthida
  அர்த்தமுடன் இதை மகிழ்ந்தே கொண்டாடுங்கள் 
  arththamudan ithai mahizhnthaE koNdaadungaL

Halleluyah.. Halleluyah..Halle..lu..yah
Halleluyah.. Halleluyah..Halle..lu..yah  

இயேசு கிறிஸ்து பிறந்தார் 
yEsu kiristhu piranthaar
இதயங்கள் ஒளி பெற செய்தார் -2
idhayangaL oLi pera seiythaar
  சொர்க்கத்தின் வாசலைத் திறந்தார் 
  sorkkaththin vaasalaith thiranthaar
  சௌபாக்கிய வாழ்வுக்கு வழி வகுத்தார் -2 -பனி பொழிகிறது
  sowpaakkiya vaazhvukku vazhi vahuththaar

இயேசுவால் மீட்பு விளைந்தது 
yEsuvaal meetpu viLainthathu
மாந்தர்க்கு விடுதலை விடிந்தது -2
maantharkku viduthalai vidinthathu
  சரித்திரத் திருப்பம் நிகழ்ந்தது 
  sariththira thiruppam nihazhnthathu
  நரகத்தின் ஆதிக்கம் முறிந்து சாய்ந்தது -2 -பனி பொழிகிறது
  narahaththin aathikkam murinthu saainthathu

எலிசபெத் வாழ்த்திப் பாடினாள் 
elizabeth vaazhththi paadinaaL
மேய்ப்பரும் விரைந்தே தரிசித்தார் -2
meipparum virainthaE tharisiththaar
  அன்னாள் சிமியோன் போற்றினார் 
  annaaL simiyOn pOtrinaar
  பரிசோடு ஞானிகள் பணிந்து வணங்கினார் -2 -பனி பொழிகிறது
  parisOdu gnanihaL paNinthu vaNanginaar