Pithaa kumaaran parisuththa aaviyaanavaraam | பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்

பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்
pithaa kumaaran parisuththa aaviyaanavaraam
திரித்துவ தேவனை துதித்திடுவோம் -2
thiriththuva dEvanai thuthiththiduvOm

நித்தியத்தின் மகிமை பிரகாசத்தில்
niththiyaththin mahimai pirahaasaththil
சேரக்கூடாத ஒளிதனில் -2
sErak koodaatha oLitahnil
  மூன்றில் ஒன்றாய் ஜொலித்திடும்
  moontril ontraai joliththidum
  பரம பிதாவை ஸ்தோத்தரிப்போம் -2 -பிதா 
  parama pithaavai sthOththarippOm

பாவத்தின் கோர பலியான
paavaththin kOra paliyaana
சாபங்கள் தன்னில் ஏற்றுக் கொண்டு -2
saabangaL thannil yEtru koNdu
  பாவிகளுக்காய் ஜீவன் தந்த
  paavihaLukkaai jeevan thantha
  தேவ குமாரனை ஸ்தோத்தரிப்போம் -2-பிதா 
  dEva kumaaranai sthOththarippOm

வல்லமையோடு வந்திறங்கி
vallamaiyOdu vanthirangi
வரங்கள் பலவும் நமக்கீந்த -2
varangaL palavum namakkeentha
  ஆவியின் வழியை தினம் காட்டும்
  aaviyin vazhiyai thinam kaattum
  பரிசுத்த ஆவியை ஸ்தோத்தரிப்போம் -2-பிதா 
  parisuththa aaviyai sthOththarippOm

அனல் போல் சோதனை வந்தாலும்
anal pOl sOthanai vanthaalum
அக்கினி ஊடாய் நடந்தாலும் -2
akkini oodaai nadanthaalum
  சோதனை நம்மை சூழ்ந்தாலும்
  sOthanai nammai soozhnthaalum
  ஜெயம் அளிப்பவரை ஸ்தோத்தரிப்போம் -2-பிதா 
  jeyam aLippavarai sthOththarippOm

வானவர் விரைவில் வந்திடுவார்
vaanavar viraivil vanthiduvaar
வாரும் என்றே நாம் அழைப்போமே -2
vaarum entraE naam azhaippOmaE
  வானவருடன் சேர்ந்திடும் நாள்
  vaanavarudan sErnthidum naaL
  விரைவில் நெருங்கிட ஸ்தோத்தரிப்போம் -2-பிதா 
  viraivil nerungida sthOththarippOm