pOtruvOmaE pOtruvOmaE
எம் தேவரீரை இவ்வேளையிலே நன்றியுடனே -2
em dEvareerai ivvELaiyilaE nantriyudanaE
போற்றுவோமே
pOtruvOmaE
துங்கன் இயேசுவே தூயா உமக்கே
thungan yEsuvaE thooya umakkaE
துதிகள் சாற்றிடுவேன் -2
thuthihaL saatriduvaEn
மங்கா புகழும் மகிழ்ந்து போற்றி
namgaa puhazhum mahizhnthu pOtri
எங்கும் துதித்திடுவேன்
engum thuthiththiduvaEn
கங்குல் அற எங்குமே ஒளி
kangul ara engumaE oLi
மங்கிடாமலே தங்கிட வேணும் -2— போற்றுவோமே
mangidaamalaE thangida vENum
ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே
aazhntha sEtrinil amizhntha emmaiyaE
அணைத்து எடுத்தோனே -2
aNaiththu yeduththOnaE
ஆழிதனி லெம்பாவ மெறிந்த
aazhithani lempaava merintha
அன்னை உத்தமனே
annai uththamanaE
அன்றும் இன்றும் என்றும் துதிப்பேன்
antrum intrum entrum thuthippaEn
மன்னவனையே மண்ணதினிலே -2— போற்றுவோமே
mannavanaiyaE maNNathinilaE
பாவம் போக்கியே கோபம் மாற்றியே
paavam pOkkiyaE kObam maatriyaE
ரோகம் தொலைத்தோனே -2
rOham tholaiththOnaE
துரோகி என்னையே சுத்திகரித்த
thurOhi ennaiyaE suththihariththa
தூய வேந்தனே
thooya vEnthanaE
தூயா நேயா காய மாற்றியே
thooyaa nEyaa kaaya maatriyaE
கருணாநிதியே பரிகாரியே -2— போற்றுவோமே
karuNanithiyaE parihaariyaE
பாரிலென்னையே பிரித்தெடுத்தோனே
parilennaiyaE piriththeduththOnaE
தாவி வந்தோனே -2
thaavi vanthOnaE
அகமதினிலே ஆவி ஈந்திட
ahamathinilaE aavi yeenthida
அருள் நிறைந்தவனே
aruL nirainthavanaE
தரிசனம் தந்த தேவனே
tharisanam thantha dEvanaE
பரிசுத்தமாய் பாரில் ஜீவிக்க -2— போற்றுவோமே
parisuththamaai paaril jeevikka
பூரணர் ஆகவே பூவில் வாழ்ந்திட
pooraNar aahavaE poovil vaazhnthida
கிருபை அளித்தோனே -2
kirubai aLiththOnaE
புகழை விரும்பேன் மகிழ்வேன் தினமே
puhazhai virumbaEn mahizhvaEn thinamaE
மகிமை செலுத்திடுவேன்
mahimai seluththiduvaEn
கோனே தேனே கோதில்லாதோனே
kOnaE thEnaE kOthillaathOnaE
கானம் பாடியே துதித்திடுவேன் -2— போற்றுவோமே
kaanam paadiyaE thuthiththiduvaEn