கடும் புயலிலே என்னைக் காத்தவரே
kadum puyalilaE ennai kaaththavaraE
கண்ணின் மணிபோல காப்பவரே
kaNNin maNi pOla kaappavaraE (2)
தினம்தோறும் உம் கிருபையினால்
thinam thOrum um kirubaiyinaal
வழி நடத்திடுமே
vazhi nadaththidumaE
என் அன்பு நேசரே என் ஆருயிர் நண்பனே
en anbu nEsaraE en aaruyir naNbanaE
வாழ்த்துவேன் வணங்குவேன் உம்மையே
vaazhththuvaEn vaNanguvaEn ummaiyaE
என் வாழ்நாளெல்லாம் உமக்காய் ஜீவிப்பேன்
en vaazhnaaLellaam umakkaai jeevippaEn
என் உயிருள்ள நாள்வரை உம்மைப் போற்றிடுவேன்
en uyiruLLa naaLvarai ummai pOtriduvaEn
இந்த நாளின் ஒவ்வொரு செயலிலும்
intha naaLin ovvoru seyalilum
உம் ஞானத்தால் என்னை நடத்துமே
um gnanaththaal ennai nadaththumaE (2)
நான் நடக்கும் வழிதனை காண்பித்து
naan nadakkum vazhithanai kaaNbiththu
ஆலோசனை சொல்லுமேன் — என் அன்பு
aalOsanai sollumaEn
பழைய நினைவுகள் கசந்த நிகழ்ச்சிகள்
pazhaiya ninaivuhaL kasantha nihazhchchihaL
துயரமான பல தோல்விகள்
thuyaramaana pala thOlvihaL (2)
என்னை வாட்டுகின்ற வேளையில்
ennai vaattuhintra vELaiyil
உம் சமூகத்தை நான் சாருவேன் — என் அன்பு
um samuhaththai naan saaruvaEn
உடைந்த உறவுகள் மனதின் கசப்புகள்
udaintha uravuhaL manathin kasappuhaL
என்னை நொறுக்கும் இதயத்தின் ஏக்கங்கள்
ennai norukkum idhayaththin yEkkangaL (2)
இருளாய் என்னை சூழ்கையில்
iruLaai ennai soozhhaiyil
உம் பிரசன்னம் தான் என் அடைக்கலம் — என் அன்பு
um pirasannam thaan en adaikkalam