Kavarchi naayaganaE | கவர்ச்சி நாயகனே

கவர்ச்சி நாயகனே
kavarchchi naayaganaE
கண்களில் நிறைந்தவரே
kaNgaLil nirainthavaraE     (2)
கரம் பிடித்தவரே
karam pidiththavaraE
கைவிடா கன்மலையே
kaividaa kanmalaiyaE

உமக்கே ஸ்தோத்திரம்
umakkaE sthOththiram 
உமக்கே ஸ்தோத்திரம்
umakkaE sthOththiram        (2)
உயிருள்ள நாளெல்லாம்
uyiruLLa naaLellaam
உமக்கே ஸ்தோத்திரம்
umakkaE sthOththiram

என்னை இழுத்துக்கொள்ளும்
ennai izhuththuk koLLum
ஓடி வந்திடுவேன் -2
Odi vanthiduvaEn
  அறைக்குள் அழைத்துச் செல்லும்
  araikkuL azhaiththu sellum
  அன்பில் களிகூறுவேன் -2 -உமக்கே 
  anbil kaLikooruvaEn

திராட்சை இரசம் பார்க்கிலும்
thiraatchai rasam paarkkilum
இனிமையானவரே  -2
inimaiyaanavaraE
  ஊற்றுண்ட பரிமளமே
  ootruNda parimaLamaE
  உலகெல்லாம் உம் மணமே -2 -உமக்கே 
  ulahellaam um maNamaE

இடக்கையால் தாங்குகிறீர்
idakkaiyaal thaanguhireer
வலக்கையால் தழுவுகிறீர் -2
valakkaiyaal thazhuvuhireer
  எனக்கு உரியவரே
  enakku uriyavaraE
  இதயம் ஆள்பவரே -2 -உமக்கே 
  idhayam aaLbavaraE

உம் மீது கொண்ட நேசம்
um meethu koNda nEsam
அக்கினி ஜுவாலையன்றோ -2
akkini juvaalaiyantrO
  தண்ணீரும் வெள்ளங்களும்
  thaNNeerum veLLangaLum
  தணிக்க முடியாதையா -2 -உமக்கே 
  thaNikka mudiyaathaiyaa