Mahimai mEl mahimai | மகிமை மேல் மகிமை

மகிமை மேல் மகிமை அடைந்திடுவேன்
mahimai mEl mahimai adainthiduvaEn
மறுரூபமாவேன் மனமதிலே
maruroopamaavaEn manamathilaE
  மகிழ்ந்திடவே தரிசிக்கவே பரன் முகமே -2
  mahizhnthidavaE tharisikkavaE paran muhamaE

உந்தன் பாதம் என்னை பலியாய்
unthan paatham ennai paliyaai
உண்மை மனதுடன் ஒப்படைத்தேன் -2
uNmai manathudan oppadaiththaEn
 ஏற்றுக் கொண்டருளும் தேவ பெலன் விளங்கும்
 yEtru koNdaruLum dEva belan viLangum 
 தேற்றி உயிர்ப்பித்திடும் தம் ஆவியினால் -மகிமை 
 thEtri uyirppiththidum tham aaviyinaal

தேவ சாயல் தேவ சமுகம் 
dEva saayal dEva samuham 
தேவ பிள்ளைகள் அடையும் பாக்கியம் -2 
dEva piLLaihaL adaiyum baakkiyam 
  எந்தன் வாஞ்சையிதே என்று சேர்ந்திடுவேன்
  enthan vaanjaiyithaE entru sErnthiduvaEn
  என்னை நிரப்பிடுமே தம் ஆவியினால்-மகிமை 
  ennai nirappidumaE tham aaviyinaal

ஜீவ ஜலமே பொங்கி வருதே
jeeva jalamaE pongi varuthaE
ஜீவ ஊற்றுகள் திறந்தனவே -2 
jeeva ootruhaL thiranthanavaE 
  தம் கரம் பிடித்தேன் அங்கு வழி நடத்தும்
  tham karam pidiththaEn angu vazhi nadaththum
  தாகம் தீர்த்திடுவேன் தம் ஆவியினால்-மகிமை 
  thaagam theerththiduvaEn tham aaviyinaal

பாதம் ஒன்றே போதும் என்றேன்
paatham ontraE pOthum entraEn
பேசும் ஆண்டவர் தொனியும் கேட்டேன் -2
pEsum aaNdavar thoniyum kEttaEn
  இன்ப வாக்குகளே எந்தன் போஜனமே
  inba vaakkuhaLaE enthan pOjanamaE
  என்னை பெலப்படுத்தும் தம் ஆவியினால்-மகிமை 
  ennai belappaduththum tham aaviyinaal

திவ்ய குணங்கள் நாடி ஜெபித்தேன்
divya guNangaL naadi jebiththaEn
தூய வாழ்க்கையின் தேவை அதுவே -2
thooya vaazhkkaiyin thEvai athuvaE
  தேவ சேவையிலே பாடு சகித்திடவே
  dEva sEvaiyilaE paadu sahiththidavaE
  தாரும் பொறுமை பெலன் தம் ஆவியினால்-மகிமை 
  thaarum porumai belan tham aaviyinaal

ஆவி ஆத்மா தேகம் முழுதும்
aavi aathmaa thEham muzhuthum
அன்பர் இயேசுவின் சொந்தமாமே -2
anbar yEsuvin sonthamaamaE
  பூரணம் அருளும் ஆயத்தபடுத்தும்
  pooraNam aruLum aayaththappaduththum
  பாடிப் பறந்திடுவேன் தம் ஆவியினால் -மகிமை 
  paadi paranthiduvaEn tham aaviyinaal