மகிமையின் நம்பிக்கையே
mahimaiyin nambikkaiyaE
மாறிடாத என் இயேசையா
maaridaatha en yEsaiyaa
உம்மையல்லோ பற்றிக்கொண்டேன்
ummaiyallO patrikoNdaEn
உலகத்தில் வெற்றி கொண்டேன்
ulahaththil vetri koNdaEn
துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து
thuthiththu thuthiththu mahizhnthu puhazhnthu
தூயவர் உம்மை நான் பாடுவேன் -2 -மகிமையின்
thooyavar ummai naan paaduvaEn
ஆத்துமாவின் நங்கூரமே
aathumaavin nangooramaE
அழிவில்லா பெட்டகமே -2
azhivillaa pettahamaE
நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற
nEtrum intrum jeevikkintra
நிம்மதியின் கன்மலையே -2 -துதித்து
nimmathiyin kanmalaiyaE
பள்ளத்தாக்கில் நடந்தாலும்
paLLaththaakkil nadanthaalum
பயமில்லை பாதிப்பில்லை -2
bayamillai paathippillai
உம் குரலோ கேட்குதையா
um kuralO kEtkuthaiyaa
உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா -2 -துதித்து
uLLamellaam anbaal ponguthaiyaa
நல் மேய்ப்பரே நம்பிக்கையே
nal mEipparaE nambikkaiyaE
நானும் உந்தன் ஆட்டுக்குட்டி -2
naanum unthan aattukkutti
உம்மைத் தானே பின் தொடர்ந்தேன்
ummai thaanaE pin thodarnthaEn
உம் தோளில் தான் நானிருப்பேன் -2 -துதித்து
um thOLil thaan naaniruppaEn
பிரகாசிக்கும் பேரொளியே
pirahaasikkum pEroLiyaE
விடிவெள்ளி நட்சத்திரமே -2
vidiveLLi natchaththiramaE
உம் வசனம் ஏந்திக் கொண்டு
um vasanam yEnthi koNdu
உலகெங்கும் சுடர்விடுவேன் -2 -துதித்து
ulahengum sudarviduvaEn