Malai mEl yEri vanthaEn | மலைமேல் ஏறி வந்தேன்

மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே
malai mEl yEri vanthaEn thahappanaE
மறுரூபம் ஆகணும் தகப்பனே – ஜெப
maruroopam aahaNumaE thahappanaE -jeba
  உலகை மறக்கணுமே தகப்பனே -2
  ulahai marakkaNumaE thahappanaE
உம் குரல் கேட்கணும் நாள்முழுதும் -2 -மலைமேல் 
um kural kEtkaNumaE naaL muzhuthum

காலையும் மாலையும் மதிய வேளையும்
kaalaiyum maalaiyum mathiya vELaiyum
கைகள் உமை நோக்கி உயரணுமே -2
kaihaL umai nOkki uyaraNum
  அழியும் உலகத்திற்காய் கதறணுமே -2
  azhiyum ulahaththirkaai katharaNum
அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே -2 -மலைமேல் 
aruththu kaLanjiyaththil sErkkaNum

உமது வார்த்தைகள் உணவாய் மாறணும்
umathu vaarththaihaL uNavaai maaraNum
ஒவ்வொரு நாளும் தியானிக்கணும் -2
ovvoru naaLum thiyaanikkaNum
  வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும் -2
  vEthaththin veLichchaththilaE nadakkaNum
வெற்றிக் கீதங்கள் நான் பாடணும் -2
vetri keethangaL naan paadaNum

ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி
gnanaththai pOthiththu arivai uNarththi
தீர்க்கதரிசனம் சொல்லணும் -2
theerkkatharisanam sollaNum
  ஆவிகள் பகுத்தறியும் வரம் வேண்டும் -2
  aavihaL pahuththariyum varam vENdum
வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும் -2
viyaathihaL neekkum aatral vENdum