MaNavaaLan karththar yEsu varuhintaaraE | மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே

மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே
maNavaaLan karththar yEsu varuhintaaraE
மணவாட்டி சந்திக்க ஆயத்தம்தானா?
maNavaatti santhikka aayaththam thaanaa

பிரியமே நீ ரூபவதி
piriyamaE nee roopavathi
எழுந்து வா உன் நேசரைச் சந்திக்கவே –2- மணவாளன்
ezhunthu vaa un nEsarai santhikkavaE 

குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதே
kuruvihaL paadum saththam engum kEtkuthaE
காட்டுப்புறா சப்தம் நம் தேசம் நிறையுதே -2
kaattu puraa saptham nam dEsam niraiyuthaE
  அத்திமரம் காய்காய்க்க காலம் வந்தததே -2
  aththi maram kaai kaaikka kaalam vanthathaE
திராட்சைக் கோடி பூ பூத்து வாசம் பெருகுதே -2– என் பிரியமே
thiraatchai kodi poo pooththu vaasam peruhuthaE 

மாரிக்காலம் சென்றது மழையும் வந்தது
maari kaalam sentrathu mazhaiyum vanthathu
பூமியிலே புஷ்பங்கள் பூத்துக் குலுங்குதே -2
poomiyilaE pushpangaL pooththu kulunguthaE
  கன்மலையின் சிகரங்களில் தங்கும் புறாவே -2
  kanmalaiyin siharangaLil thangum puraavaE
கர்த்தர் இயேசு வரும் நாளை சொல்லிப் பாடிடு-2 – என் பிரியமே
karththar yEsu varum naaLai solli paadidu

சாரோனின் ரோஜாவாம் கர்த்தர் இயேசு
saarOnin rOjaavaam karththar yEsu
பள்ளத்தாக்கின் லீலியாம் பரமன் இயேசு -2
paLLaththaakkin leeliyaam paraman yEsu
  தாகம் தீர்க்கும் ஜீவ நதி கர்த்தர் இயேசு -2
  thaagam theerkkum jeeva nathi karththar yEsu
பாவம் போக்கும் பரிகாரி பரமன் இயேசு -2– என் பிரியமே
paavam pOkkum parihaari paraman yEsu