நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
neer seiytha nanmaihaLai ninaikkintraEn
கருத்தோடு நன்றி சொல்கிறேன் – 2
karuththOdu nantri solhiraEn
என் தாயின் கருவிலே நான் உருவான நாள்முதல்
en thaayin karuvilaE naan uruvaana naaLmuthal
நாள்தோறும் காத்து வந்தீரே
naaLthOrum kaaththu vantheeraE (2)
என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்
en naasiyilaE naan suvaasiththa naaLmuthal
நாள்தோறும் காத்து வந்தீரே
naaLthOrum kaaththu vantheeraE
நன்றி நன்றி பலி செலுத்தியே
nantri nantri pali seluththiyaE
நாதன் இயேசுவையே பாடுவேன்
naathan yEsuvaiyaE paaduvaEn (2)
கோடி நன்றிபலி செலுத்தியே
kOdi nantri pali seluththiyaE
ஜீவன் தந்தவரை பாடுவேன்
jeevan thanthavarai paaduvaEn
பாவியாக நான் வாழ்ந்து
paaviyaaha naan vaazhnthu
பாவம் செய்த நாட்களிலும்
paavam seiytha naatkaLilum
நாள்தோறும் காத்து வந்தீரே
naaLthOrum kaaththu vantheeraE (2)
நான் உம்மைவிட்டு தூரம் சென்று
naan ummai vittu thooram sentru
துரோகம் செய்த நாட்களிலும்
thrOham seiytha naatkaLilum
நாள்தோறும் காத்து வந்தீரே -நன்றி நன்றி பலி
naaLthOrum kaaththu vantheeraE
நான் திக்கற்று துணையின்றி
naan thikkatru thuNaiyintri
திகைத்திட்ட நேரத்தில்
thihaiththitta nEraththil
துணையாக தேடி வந்தீரே (2)
thuNaiyaaha thEdi vantheeraE
நான் துக்கத்தால் மனம்நொந்து
naan thukkaththaal manamnonthu
மடிகின்ற நேரத்தில்
madihintra nEraththil
மகன் என்னைத் தேடி வந்தீரே-நன்றி நன்றி பலி
mahan ennai thEdi vantheeraE
நான் மனதார நேசித்த
naan manathaara nEsiththa
மனிதர்கள் மறந்தாலும்
manitharhaL maranthaalum
மறவாத நேசர் நீரையா
maravaatha nEsar neeraiyaa (2)
சூழ்நிலைகள் மாறிட்டாலும்
soozhnilaihaL maarittaalum
மாறிடா உம் கிருபையாலே
maaridaa um kirubaiyaalaE
நாள்தோறும் தாங்கினீரையா-நன்றி நன்றி பலி
naaLthOrum thaangineeraiyaa
நீர் செய்த நன்மைகளை நான் நினைத்துப் பார்க்கிறேன்
neer seiytha nanmaihaLai naan ninaiththu paarkkiraEn
கருத்தோடு நன்றி சொல்கிறேன் – 2
karuththOdu nantri solhiraEn