NiharaE illaatha sarvEsaa | நிகரே இல்லாத சர்வேசா

நிகரே இல்லாத சர்வேசா
niharaE illaatha sarvEsaa
திகழும் ஒளி பிரகாசா
thihazhum oLi pirahaasaa
துதிபாடிட இயேசு நாதா
thuthi paadida yEsu naathaa
பதினாயிரம் நாவுகள் போதா -நிகரே
pathinaayiram naavuhaL pOthaa

துங்கன் இயேசு மெய் பரிசுத்தரே
thungan yEsu mei parisuththaraE
எங்கள் தேவனைத் தரிசிக்கவே -2
engaL dEvanai tharisikkavaE
  துதிகளுடன் கவிகளுடன்
  thuthihaLudan kavihaLudan
  தூய தூயனை நெருங்கிடுவோம்  -நிகரே
  thooya thooyanai nerungiduvOm

கல்லும் மண்ணும் எம் கடவுளல்ல
kallum maNNum em kadavuLalla
கையின் சித்திரம் தெய்வமல்ல -2
kaiyin siththiram deivamalla
  ஆவியோடும் உண்மையோடும்
  aaviyOdum uNmaiyOdum
  ஆதி தேவனை வணங்கிடுவோம் -நிகரே
  aathi dEvanai vaNangiduvOm

பொன் பொருள்களும் அழிந்திடுமே
pon poruLhaLum azhinthidumaE
மண்ணும் மாயையும் மறைந்திடுமே -2
maNNum maayaiyum marainthidumaE
  இதினும் விலை பெரும் பொருளே
  ithinum vilai perum poruLaE
  இயேசு ஆண்டவர் திருவருளே-நிகரே
  yEsu aaNdavar thiruvaruLaE

தேவ மைந்தனாய் அவதரித்தார்
dEva mainthanaai avathariththaar
பாவ சோதனை மடங்கடித்தார் -2
paava sOthanai madangadiththaar
  மனிதனுக்காய் உயிர் கொடுத்தார்
  manithanukkai uyir koduththaar
  மாளும் மாந்தரை மீட்டெடுத்தார் -நிகரே
  maaLum maantharai meetteduththaar

கொந்தளிக்கும் அலைகளையும்
konthaLikkum alaihaLaiyum
கால் மிதிக்கும் கர்த்தரவர் -2
kaal mithikkum karththaravar
  அடங்கிடுமே அதட்டிடவே 
  adangidumaE athattidavaE
  அக்கரை நாமும் சேர்ந்திடவே -நிகரே
  akkarai naamum sErnthidavaE

ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்
jeevan thanthavar mariththezhunthaar
ஜீவ தேவனே உயிர்த்தெழுந்தார் -2
jeeva dEvanaE uyirththezhunthaar
  மறுபடியும் வருவேனென்றார்
  marupadiyum varuvEnentaar
  மா சந்தோஷ நாள் நெருங்கிடுதே -நிகரே
  maa santhOsha naaL nerungiduthaE