dEvanaE naan umathaNdaiyil | தேவனே நான் உமதண்டையில்

தேவனே நான் உமதண்டையில்
dEvanaE naan umathaNdaiyil
இன்னும் நெருங்கிச்              (2)
innum nerungi
சேர்வதே என் ஆவல் பூமியில்
sErvathaE en aaval poomiyil

மாவலிய கோரமாக வன் சிலுவை
maa valiya kOramaaha van siluvai
மீதினில் நான்
meethinil naan
கோவே தொங்க நேரிடினும்
kOvaE thinga nEridinum
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
aavalaai ummaNdai sErvaEn

யாக்கோபைப் போல் போகும் பாதையில் பொழுது பட்டு
yaakkObai pOl pOhum paathaiyil pozhuthu pattu
இராவின்  இருள் வந்து மூடிட
raavin iruL vanthu moodida
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
thookkaththaal naan kallil saainthu
தூங்கினாலும் என் கனாவில்
thoonginaalum en kanaavil
நோக்கியும்மைக் கிட்டி சேர்வேன்
nOkkiyummai kitti sErvaEn
வாக்கடங்கா நல்ல நாதா -தேவனே நான் 
vaakkadangaa nalla naathaa

பரத்துக்கேறும் படிகள் போலவே
paraththukkErum padihaL pOlavaE
என் பாதை தோன்றப்
en paathai thOntra
பண்ணும் ஐயா என்றன்  தேவனே
paNNum iyyaa entran dEvanaE
கிருபையாக நீர் எனக்குத்
kirubaiyaaha neer enakku
தருவதெல்லாம் உமதண்டை
tharuvathellaam umathaNdai
அருமையாய் என்னையழைத்து
arumaiyaai ennaiyazhiththu
அன்பின் தூதனாக செய்யும்  -தேவனே நான் 
anbin thoothanaaha seiyyum

நித்திரையினின்று விழித்துக் காலை எழுந்து
niththiraiyinintru vizhiththu kaalai ezhunthu
கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன்
karththaavaE naan ummai pOtruvaEn
இத்தரையில் உந்தன் வீடாய்
iththaraiyil unthan veedaai
என் துயர்க் கல் நாட்டுவேனே
en thuyark kal naattuvaEvaE
என்றன் துன்பத்தின் வழியாய்
entran thunbaththin vazhiyaai
இன்னும்  உம்மைக் கிட்டி சேர்வேன் -தேவனே நான் 
innum ummai kitti sErvaEn

ஆனந்தமாம் செட்டை விரித்துப் பரவசமாய்
aananthamaai settai viriththu paravasamaai
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
aahaayaththil yErip pOyinum
வான மண்டலங் கடந்து
vaana maNdalang kadanthu
பறந்து மேலே சென்றிடினும்
paranthu mElaE sentridinum
மகிழ்வுறு காலத்திலும் நான்
mahizhvuru kaalaththilum naan
மருவியும்மைக் கிட்டிக் சேர்வேன் -தேவனே நான் 
maruviyummai kitti sErvaEn