Immaanuvelin rathathaal | இம்மானுவேலின் இரத்தத்தால்

இம்மானுவேலின் இரத்தத்தால்
immaanuvElin raththaththaal
நிறைந்த ஊற்றுண்டே 
niraintha ootruNdaE
எப்பாவத் தீங்கும் அதினால்
eppaavath theengum athinaal
நிவிர்த்தி யாகுமே
nivirththiyaahumaE

மா பாவியான கள்ளனும்
maa paaviyaana kaLLanum
அவ்வூற்றில் மூழ்கினான்
avvootril moozhkinaan
மன்னிப்பும் மோட்சானந்தமும் 
mannippum mOtchaananthamum
அடைந்து பூரித்தான்
adainthu pooriththaan

அவ்வாறே நானும் இயேசுவால்
avvaaraE naanum yaEsuvaal
விமோசனம் பெற்றேன்
vimOsanam petraEn
என் பாவம் நீங்கிப் போனதால்
en paavam neengi pOnathaal
ஓயாமல் பாடுவேன்
Oyaamal paaduvaEn

காயத்தில் ஓடும் இரத்தத்தை
kaayaththil Odum raththaththai
விஸ்வாசத்தால் கண்டேன்
visvaasaththaal kaNdaEn
ஒப்பற்ற மீட்பர் நேசத்தை
oppatra meetpar nEsaththai
எங்கும் பிரஸ்தாபிப்பேன்
engum pirasthaabippaEn

பின் விண்ணில் வல்ல நாதரை
pin viNNil valla naatharai
நான் கண்டு பூரிப்பேன்
naan kaNdu poorippaEn
அங்கென்னை மீட்ட நேசத்தை
angennai meetta nEsaththai
கொண்டாடிப் போற்றுவேன்!
koNdaadip pOtruvaEn