Inba yaEsu raajavai naan paarththaal pOthum | இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
inba yEsu raajaavai naan paarththaal pOthum
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் -2
mahimaiyil avarOdu naan vaazhnthaal pOthum
  நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் -2
  niththiyamaam mOtcha veettil sErnthaal pOthum
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் -2 -இன்ப இயேசு
allEluyah koottaththil naan mahizhnthaal pOthum

இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
yEsuvin raththaththaalaE meetkappattu
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு -2
vasanamaam vEliyaalaE kaakkappattu
  கறைதிரை அற்ற பரிசுத்தரோடு -2
  karaithirai atra parisuththarOdu
ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் -2 -இன்ப இயேசு
yEzhaiyaan pon veethiyil ulaaviduvaEn

தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
thootharhaL veeNaihaLai meettum pOthu
நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது -2
niraivaana jeya kOsham muzhangum pOthu
  அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு -2
  allEluyah keetham paadik koNdu
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் -2 -இன்ப இயேசு
anbaraam yEsuvOdu agamahizhvaEn

முள் கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
muL kreedam soottappatta thalaiyai paarppaEn
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் -2
porkreedam sootti naanum puhazhnthiduvaEn
  வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து -2
  vaarinaal adipatta muthuhai paarththu
ஒவ்வொரு காயங்களாய் முத்தம் செய்வேன் -2 -இன்ப இயேசு
ovvoru kaayangaLaai muththam seiyvaEn

என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
ennuLLam nantriyaal nirainthiduthaE
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே -2
enthanin paakkiya veettai ninaikkaiyilaE
  அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
  allEluyah aamEn allEluyah
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா -2 -இன்ப இயேசு
varNikka enthan naavu pOthaathaiyaa

ஆஹா! எக்காளம் என்று முழங்கிடுமோ
aahaa ekkaaLam entru muzhangidumO
ஏழை என் ஆவல் என்று தீர்ந்திடுமோ -2
yEzhai en aaval entru theernthidumO
  அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ -2
  appaa en kaNNeer entru thudaikkiraarO
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமும் -2 -இன்ப இயேசு
aavalaai yEngiduthaE enathuLLamum