இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்
intha kallin mEl en sabaiyai kattuvaEn
பாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாதே -2
paathaaLaththin vaasal athai mErkoLLaathaE
சபையின் தலைவர் இயேசுவே
sabaiyin thalaivar yEsuvaE
மூலைக்கு தலைக்கல் இயேசுவே -2
moolaikku thalaikkal yEsuvaE
ஹலேலூயா (2) சபைதான் ஜெயிக்குமே
hallEluyah (2) sabai thaan jeyikkumaE
ஹலேலூயா (2) பாதாளம் தோற்குமே
hallEluyah (2) paathaaLam thOrkumaE
இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவே
raththam sinthi meetkappatta sabaiyithuvaE
சுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே -2
suththam pera kiristhu thantha sthalamithuvaE
சபைதனில் நிலைநாட்டினீர்
sabai thanil nilainaattineer
புது மனிதனாய் என்னை மாற்றினீர்
puthu manithanaai ennai maatrineer
வாழ்க்கையை செழிப்பாக்கினீர்
vaazhkkaiyai sezhippaakkineer
கிருபையால் உயர்த்தினீர் -என்னை -இந்தக்
kirubaiyaal uyarththineer -ennai
ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை இதுவே
jebaththinaal kattappatta sabai ithuvaE
குடும்பமாய் இணைத்த நல் உறவிதுவே / வீடிதுவே -2
kudumbamaai iNaiththa nal uravithuvaE/veedithuvaE
ஆவியின் நல்ல தகப்பனே
aaviyin nalla thagappanaE
சபை முழுவதும் எங்கள் சொந்தமே
sabai muzhuvathum engaL sonthamaE
வேற்றுமைகள் இங்கு இல்லையே
vEtrumaihaL ingu illaiyaE
கிறிஸ்துவின் சரீரமே -நாங்கள் -இந்தக்
kristhuvin sareeramaE -naangaL
பார்வோனின் வல்லமைகள் முறியச் செய்தீர்
paarvOnin vallamaihaL muriya seiytheer
யேசபேலின் தந்திரங்கள் அழியச் செய்தீர் -2
yEsabElin thanthirangaL azhiya seiytheer
எழுப்புதல் தரும் அக்கினி
ezhupputhal tharum akkini
எங்கள் ஜெபத்திலே பற்றி எரியுதே
engaL jebaththilaE patri yeriyuthaE
தடைகளை அது தகர்க்குதே
thadaihaLai athu thagarkuthaE
சபைதான் வெல்லுமே -என்றும்
sabai thaan vellumaE -entrum