ஜெயம் கொடுக்கும் (எங்கள் )தேவனுக்கு
jeyam kodukkum (engaL) dEvanukku
கோடி கோடி ஸ்தோத்திரம்
kOdi kOdi sthOththiram (2)
வாழ்வளிக்கும் இயேசு இராஜாவுக்கு
vaazhvazhikkum yEsu rajaavukku
வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம்
vaazhnaaLellaam sthOththiram
அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
allEluyah allEluyah paaduvaEn
ஆனந்த தொனியாய் உயர்த்துவேன் -2
aanantha thoniyaai uyarththuvaEn
நீதியின் கரத்தினால் தாங்கியே நடத்துவார் -2
neethiyin karaththinaal thaangiyaE nadaththuvaar
கர்த்தரே என் பெலன் எதற்கும் அஞ்சிடேன் -2 -ஜெயம்
karththaraE en belan yetherkum anjidaEn
அற்புதம் செய்பவர் அகிலம் படைத்தவர் -2
arputham seiybavar ahilam padaiththavar
யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயிக்கிறார் -2 -ஜெயம்
yuththaththil vallavar meetpar jeyikkiraar
நம்பிக்கை தேவனே நன்மைகள் அளிப்பவர் -2
nambikkai dEvanaE nanmaihaL aLippavar
வார்த்தையை அனுப்பியே மகிமைப்படுத்துவார் -2 -ஜெயம்
vaarththaiyai anuppiyaE mahimaippaduththuvaar
உண்மை தேவனே உருக்கம் நிறைந்தவர் -2
uNmai dEvanaE urukkam nirainthavar
என்னையும் காப்பவர் உறங்குவதில்லையே -2 -ஜெயம்
ennaiyum kaappavar uranguvathillaiyaE