கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் மனுஷன் நான்
karththar mEl nambikkai vaikkum manushan naan
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட மனுஷன் நான் -2
karththarai nambikkaiyaai koNda manushan naan
கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
karththar mEl paaraththai vaiththu vittaEn
அவரே என்னை ஆதரிப்பார்
avaraE ennai aatharippaar (2)
கர்த்தரையே நான் நம்பிடுவேன்
karththaraiyaE naan nambiduvaEn
ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்
oru pOthum thaLLaada vida maattaar
உஷ்ணம் வருவதை பாராமல்
ushNam varuvathai paaraamal
என் இலைகள் பச்சையாய் இருக்கும்
en ilaihaL pachchaiyaai irukkum (2)
மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்
mazhai thaazhchchiyaana varushangaLilum
வருத்தமின்றி கனி கொடுக்கும்
varuththamintri kani kodukkum
என் வேர்கள் தண்ணீருக்குள்
en vErhaL thaNNeerukkuL
என் நம்பிக்கை இயேசுவின் மேல் -2 -கர்த்தர் மேல்
en nambikkai yEsuvin mEl
நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு
neerkkaalhaL Oram nadappattu
என் காலத்தில் கனியைக் கொடுப்பேன்
en kaalaththil kaniyai koduppaEn (2)
இலையுதிரா மரம் போல் இருப்பேன்
ilaiyuthiraa maram pOl iruppaEn
நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்
naan seiyvathellaam vaaikka seiyveer
உம் வேதத்தில் பிரியம் கொண்டு
um vEthaththil piriyam koNdu
அதை இராப்பகல் தியானிப்பதால் -2 -கர்த்தர் மேல்
athai raappahal thiyaanippathaal
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
uyirOdu vaazhum naatkaLellaam
என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை
ennai oruvanum yethirppathillai (2)
என் வழியை வாய்க்கச் செய்திடுவேன்
en vahiyai vaaikka seiythiduvaEn
புத்திமானாய் நடந்து கொள்வேன்
puththimaanaai nadanthu koLvEn
என் வாய்விட்டு பிரிவதில்லை
en vaai vittu pirivathillai
அதை தியானிக்க மறப்பதில்லை -2 -கர்த்தர் மேல்
athai thiyaanikka marappathillai