aa ambara umbaramum puhazhunthiru | ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு

ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு
aa ambara umparamum puhazhunthiru
ஆதிபன் பிறந்தார்
aathiban piranthaar

ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார்
aathiban piranthaar -amalaathiban piranthaar

அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! – நவ
anbaana paranaE -aruL mEvung kaaraNanaE -nava
அச்சய சச்சித – ரட்சகனாகிய
achchaya sachchitha ratchahanaahiya
உச்சிதவரனே! — ஆ! அம்பர
uchchitha varanaE 

ஆதம் பவமற, – நீதம் நிறைவேற, – அன்று
aatham pavamara neethan niraivEra antru
அல்லிராவினில் – தொல்லையிடையினில்
alli raavinil thollaiyidaiyinil
புல்லணையிற் பிறந்தார். — ஆ! அம்பர
pullaNaiyir piranthaar

ஞானியர் தேட , – வானவர் பாட , -மிக
gnaniyar thEda vaanavar paada miha
நன்னய , உன்னத – பன்னரும் ஏசையா
nannaya unnatha pannarum yEsaiyya
இந்நிலம் பிறந்தார். — ஆ! அம்பர
innilam piranthaar

கோனவர் நாட , – தானவா கொண்டாட – என்று
kOnavar naada thaanavaa koNdaada entru
கோத்திரர் தோத்திரஞ் சாற்றிட வே , யூத
kOththirar thOththiranj saatrida vE yutha
கோத்திரன் பிறந்தார். — ஆ! அம்பர
kOththiran piranthaar

விண்ணுடு தோண , – மன்னவர் பேண , – ஏரோது
viNNudu thONa mannavar pENa yErOthu
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
mainthanin sinthai yazhunthi kalangida
விந்தையாய்ப் பிறந்தார். — ஆ! அம்பர
vinthaiyaai piranthaar