AaraarO paadungaL | ஆராரோ பாடுங்கள்

ஆராரோ பாடுங்கள் 
aaraarO paadungaL
அகிலமெங்கும் கூறுங்கள் -2
ahilamengum koorungaL
  ஆதவன் இயேசு பிறந்தாரென்று – 2
  aathavan yEsu piranthaarentru
அல்லேலூயா பாடிடுங்கள் – 4 -ஆராரோ 
allEluyah paadidungaL

அன்னை மரியின் சின்னப் பிள்ளை
annai mariyin chinna piLLai
அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை -2
anbu pithaavin chella piLLai
  தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு -2
  theerkar vaakkin niraivaE yEsu
வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு -2 -அல்லேலூயா 
vazhiyum saththiyamum jeevanum yEsu
  
முன்னனையில் தவழ்ந்த இரட்சகரே
munnaNaiyil thavazhntha ratchagaraE
எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே -2
eNNatrOr idhayaththil vaazhbavaraE
  கண்மணிப்போல காப்பவரே -2
  kaNmaNi pOla kaappavaraE
காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே -2-அல்லேலூயா 
kaalamellaam vaazhum niththiyarum neeraE