Baliyidu thuthi baliyidu | பலியிடு துதி பலியிடு

பலியிடு துதி பலியிடு
baliyidu thuthi baliyidu
வலி விலகும் வாழ வழி பிறக்கும் – 2
vali vilahum vaazha vazhi pirakkum
  துதிபலி அது சுகந்த வாசனை
  thuthi pali suhantha vaasana
  நன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2 -பலியிடு 
  nantri pali athu uhantha kaaNikkai

துதிபலி செலுத்திட பொருத்தனை செய்ததும்
thuthi pali seluththida poruththanai seiythathum
மீன் அன்று கக்கியது கரையிலே – 2
meen antru kakkiyathu karaiyilaE
  யோனாவைக் கக்கியது கரையிலே – அன்று – 2 -துதிபலி 
  yOnaavai kakkiyathu karaiyilaE

நோவாவின் பலிதனை நுகர்ந்தார் நம் கர்த்தர்
nOvaavin palithanai nuharnthaar nam karththar
சுகந்த வாசனையாய் – 2
suhantha vaasanaiyaai
  பலுகிப் பெருகச் செய்தார் – அன்று – 2-துதிபலி 
  paluhi peruha seiythaar -antru

நல்லவர் கர்த்தர் என்று எல்லாரும் துதிக்கையில்
nallavar karththar entru ellaarum thuthikkaiyil
ஆலயத்தை மேகம் மூடியது – 2
aalayaththai mEham moodiyathu
  கண்டார்கள் கர்த்தர் மகிமையை – அன்று – 2-துதிபலி 
  kaNdaarhaL karththar mahimaiyai -antru

சீலாவும் பவுலும் சிறையிலே துதித்ததால்
seelaavum pavulum siraiyilaE thuthiththathaal
கட்டுக்கள் கழன்று போயின – 2
kattuhaL kazhantru pOyina
  அதிகாரி இரட்சிக்கப்பட்டான் – அந்த – 2-துதிபலி 
  athikaari ratchikkappattaan