beththalaiyil piranthavarai | பெத்தலையில் பிறந்தவரைப்

பெத்தலையில் பிறந்தவரைப்
beththalaiyil piranthavarai
போற்றித் துதி மனமே – இன்னும்
pOtri thuthi manamaE -innum

குளிரும் பனியும் கொட்டிலிலே 
kuLirum paniyum kottililaE
கோமகனும் தொட்டிலிலே 
kOmahanum thottililaE
ஆரிரோ..ஆரிரோ..ஆரிராரோ..
aarirO..aarirO..aariraarO
ஆராரோ..ஆராரோ..ஆரிராரோ 
aaraarO..aaraarO..aariraarO

  தூங்கு தூங்கு பாலா நீ  -2
  thoongu thoongu paalaa nee

சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் -2
saruvaththaiyum padaiththaaNda saruva vallavar 
  இங்கு தாழ்மையுள்ள தாய்மடியில் தலை சாய்க்கலானார் -2
  ingu thaazhmaiyuLLa thaai madiyil thalai saaikkalaanaar

சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார்  -2
singaasanam veetrirukkum dEva mainthanaar
  இங்கு பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார் -2
   ingu pangamutra pasunthottilil paduththirukkiraar

முன்னம்  அவர் சொன்னபடி முடிப்பதற்காக – 2
munnam avar sonnapadi mudippatharkaaha
  இங்கு மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே -2
  ingu mOtcham vittu thaazhchiyuLLa munnaNaiyilaE

ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர் -2
aavihaLin pOtruthalaal aanantham koNdOr
  இங்கு ஆக்களட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் -2
  ingu aakkaLuda saththaththukkuL azhuthu piranthaar

இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – 2
inthadaivaai anbu vaiththa em perumaanai 
  நாம் எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே -2
  naam eNNamudan pOi thuthikka yEhiduvOmaE