Endrum aanantham | என்றும் ஆனந்தம்

என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார்-2
entrum aanantham en yEsu tharuhiraar
  துதிப்பேன் துதிப்பேன்
  thuthippaEn thuthippaEn
  துதித்துக் கொண்டேயிருப்பேன் -2
  thuthiththuk koNdaEyiruppaEn
அல்லேலூயா ஆனந்தமே -2
allEluyah aananthamaE

உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
unnathar maraivil vallavar nizhalil
என்றும் தங்குவேன் -2
entrum thanguvaEn
  தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
  dEvanai nOkki adaikkala paarai
  என்றே சொல்லுவேன் -2 -அல்லேலூயா
  entraE solluvaEn

தமது சிறகால் என்னை மூடி
thamathu sirahaal ennai moodi
காத்து நடத்துவார் -2
kaaththu nadaththuvaar
  அவரது வசனம் ஆவியின் பட்டயம்
  avarathu vasanam aaviyin pattayam
  எனது கேடகம் -2 -அல்லேலூயா
  enathu kEdaham

வழிகளிளெல்லாம் என்னைக் காக்க
vazhihaLilellaam ennai kaakka
தூதர்கள் எனக்குண்டு -2
thootharhaL enakkuNdu
  பாதம் கல்லில் மோதாமல் காத்து
  paatham kallil mOthaamal kaaththu
  கரங்களில் ஏந்துவார் -2 -அல்லேலூயா
  karangaLil yEnthuvaar

சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
singaththin mElum paambin mElum
நடந்தே செல்லுவேன் -2
nadanthaE selluvaEn
  சாத்தானின் சகல வலிமையை வெல்ல
  saaththaanin sahala valimaiyai vella
  அதிகாரம் எனக்குண்டு -2 -அல்லேலூயா
  athikaaram enakkuNdu