Ennai azhaiththavaraE | என்னை அழைத்தவரே

என்னை அழைத்தவரே
ennai azhaiththavaraE
என்னை நடத்திடுவீர்
ennai nadaththiduveer
எல்லா பாதையிலும்
ellaa paathaiyilum
கரம் பிடித்தவர் நீர் கைவிடமாட்டீர்
karam pidiththavar neer kaivida maatteer
  என்னை அழைத்தவர் நீர் அல்லவா -2
  ennai azhaiththavar neer allavaa

என்னை அழைத்தவர் நீர் அல்லவா
ennai azhaiththavar neer allavaa
முன் குறித்ததும் நீர் அல்லவா -2 -என்னை அழைத்தவரே
mun kuriththathum neer allavaa

சோதனைகள் என்னை சூழ்ந்தாலும்
sOthanaihaL ennai soozhnthaalum
தேவைகளே என் தேவையானாலும் - 2
thEvaihaLaE en thEvaiyaanaalum
  தொடர்ந்து முன்னேறுவேன் விசுவாசத்தினால் - 2
  thodarnthu munnEruvaEn visuvaasaththinaal
என்னை அழைத்தவர் நீர் அல்லவா - 2 -என்னை அழைத்தவரே
ennai azhaiththavar neer allavaa

சத்துருக்கள் என்னை நெருக்கினாலும்
saththurukkaL ennai nerukkinaalum
நாள்தோறும் என்னை நிந்தித்தாலும் - 2
naaL thOrum ennai ninthiththaalum
  ஜெயித்திடுவேன் உந்தன் பெலத்தினால் - 2
  jeyiththiduvaEn unthan belaththinaal
என்னை அழைத்தவர் நீர் அல்லவா - 2 -என்னை அழைத்தவரே
ennai azhaiththavar neer allavaa

மனிதர்கள் தினமும் மாறினாலும்
manitharhaL thinamum maarinaalum
சூழ்நிலைகள் எல்லாம் எதிராய் வந்தாலும் - 2
soozhnilaihaL ellaam yethiraai vanthaalum
  ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்திடுவீர் - 2
  yEtra nEraththil ennai uyarththiduveer
என்னை அழைத்தவர் நீர் அல்லவா - 2 -என்னை அழைத்தவரே
ennai azhaiththavar neer allavaa