Ennai uNdaakkiya en dEvaathi dEvanavar | என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவனவர்

என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவனவர் 
ennai uNdaakkiyaen dEvaathi dEvan avar
தூங்குவதுமில்லை , உறங்குவதுமில்லை -2
thoonguvathumillai uranguvathumillai

என் மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்
en mEl avar kaNNai vaiththu aalOsanai solluvaar
சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார் -2
saththiyaththin paathaiyilaE niththamum nadaththuvaar
  பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார் -2
  parisuththa aaviyaal uLLaththai nirappuvaar
பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே — என்னை
parisuththar parisuththar avar peyaraE

பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்
belaveena naatkaLilaE belan thanthu thaanguvaar
பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார் -2
pala vitha sOthanaiyil jeyam namakkaLippaar
  ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும் -2
  aabaththuk kaalaththil araNaana kOttaiyum
கேடகமும் , துருகமும் பெலன் அவரே — என்னை
kEdahamum thuruhamum belan avaraE

ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே
aaviyaana dEvanukku roopamontrum illaiyaE
ரூபமில்லை ஆதலால் சொரூபமொன்றுமில்லையே -2
roopamillai aathalaal soroopamontrum illaiyaE
  வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலே -2
  vaanjaiyuLLa aaththumaavin iruthayanthannilaE 
வார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர் — என்னை
vaarththaiyaalaE pEsuhintra aaNdavar ivar