ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா
AamEn allEluyah mahaththuva thamparaaparaa
ஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்!
aamEn allEluyah jeyam jeyam
அனந்த தோத்திரா
anantha thOththiraa
ஓம் அனாதி தந்தார், வந்தார், இறந்
Om anaathi thanthaar vanthaar iranth
துயிர்த்தெழுந்தாரே, உன்னதமே
thuyirththezhunthaaraE unnathamaE
வெற்றிகொண் டார்ப்பரித்து – கொடும்வே
vetri koNdaarpariththu -kodumvE
தாளத்தைச் சங்கரித்து, – முறித்து
thaaLaththai sangariththu muriththu
பத்ராசனக் கிறிஸ்து – மரித்து
pathraasana kirisththu mariththu
பாடுபட்டுத்தரித்து, முடித்தார் -ஆமென்
paadupattuth thariththu mudiththaar
சாவின் கூர் ஒடிந்து, – மடிந்து,
saavin koor odinthu -madinthu
தடுப்புச் சுவர் இடிந்து, – விழுந்து,
thaduppu suvar idinthu -vizhunthu
ஜீவனே விடிந்து, – தேவாலயத்
jeevanaE vidinthu -dEvaalaya
திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது -ஆமென்
thirai reNdaai kizhinthu ozhinthathu
வேதம் நிறைவேற்றி, – மெய் தோற்றி,
vEtham niraivEtri -mei thOtri
மீட்டுக் கரையேற்றி, – பொய் மாற்றி,
meettu karai yEtri -poi maatri
பாவிகளைத் தேற்றி, – கொண்டாற்றி,
paavihaLai thEtri -koNdaatri
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் -ஆமென்
pathraasana thEtri vaazhviththaar