அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்
antha naaL inba inba inba naaL
எங்கள் இயேசு ராஜன் வானில் தோன்றும் நாள் (2)
engaL yEsu raajan vaanil thOntrum naaL
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
allEluyah allEluyah allEluyah
இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமே
intha poomi venthuruhi saambalaahumaE
சிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள் -2
sinthiththu mananthirumbi avarai aNdik koL
விரைவுடன் ஓடிவா விண்ணிலே சேரவே
viraivudan Odivaa viNNilaE sEravaE
வேகமாய் வேகமாய் வேகமாய் -2 -அந்த நாள்
vEhamaai vEhamaai vEhamaai
கஷ்டம் நஷ்டம் பட்டப்பாடு பறந்து போகுமே
kashtam nashtam patta paadu paranthu pOhumaE
பஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமே -2
panjam pasi thaagamumaE marainthu pOhumaE
வாதை நோய் துன்பமும் வருத்தங்கள் யாவுமே
vaathai nOi thunbamum varuththangaL yaavumaE
நீங்குமே நீங்குமே நீங்குமே -2 -அந்த நாள்
neengumaE neengumaE neengumaE
ஆட்டுக்குட்டி பின்னே போவார் பாட்டுப் பாடுவார்
aattukkutti pinnaE pOvaar paattu paaduvaar
பரவசங்கள் சூழ்ந்து மிக ஆட்டம் ஆடுவார் -2
paravasangaL soozhnthu aattam aaduvaar
ஆனந்தம் என்றுமே ஆர்ப்பரிப்போம் அவரையே
aanantham entrumaE aarpparippOm avaraiyaE
மகிழுவோம் மகிழுவோம் மகிழுவோம் -2-அந்த நாள்
mahizhuvOm mahizhuvOm mahizhuvOm
புதிய வானம் புதிய பூமி தோன்றும் நாளிலே
puthiya vaanam puthiya poomi thOtrum naaLilaE
நித்திய காலம் நாமும் அங்கே வாழ்வோமென்றுமே -2
niththiya kaalam naamum angaE vaazhvOmentrumaE
தூதர்கள் யாவரும் சேவைகள் புரிவாரே
thootharhaL yaavarum sEvaihaL purivaaraE
என்றுமே என்றுமே என்றென்றுமே -2 -அந்த நாள்
entrumaE entrumaE entrentrumaE
பாவமற்ற பரிசுத்தரின் ராஜ்யமதிலே
paavamatra parisuththarin raajiyamathilaE
பாலர்கள் போல நாமும் பார்க்கப்படுவோமே -2
paalarhaL pOla naamum paarkkappaduvOmaE
பாலுடன் தேனுமாய்ப் பழரசம் பாங்குடன்
paaludan thEnumaai pazharasam paangudan
பருகுவோம் பருகுவோம் பருகுவோம் -2 -அந்த நாள்
paruhuvOm paruhuvOm paruhuvOm