Appa naan ummai paarkkiraEn | அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்

அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்

appa naan ummai paarkkiraEn

அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன் -அப்பா 

anbaE naan ummai thuthikkiraEn


நீரே என் வழி நீரே என் சத்தியம் -2

neeraE en vazhi neeraE en saththiyam

  நீரே என் ஜீவனன்றோ -2 -அப்பா நான்

  neeraE en jeevanantrO


அப்பாவும் நீரே அம்மாவும் நீரே -2

appaavum neeraE ammavum neeraE

  நான் உந்தன் பிள்ளையன்றோ -2 -அப்பா நான்

  naan unthan piLLaiyantrO


நல்ல மேய்ப்பன் நீர் தானே -2

nalla mEippan neer thaanaE

  நான் உந்தன் ஆட்டுக்குட்டி -2 -அப்பா நான்

  naan unthan aattukkutti


ஜீவ நீருற்று நீர் தானே -2

jeeva neerootru neer thaanaE

  உந்தன்மேல் தாகம் கொண்டேன் -2 -அப்பா நான்

  unthan mEl thaagam koNdaEn