Athi mangala kaaraNanaE | அதி-மங்கல காரணனே,

அதி-மங்கல காரணனே, 

athi mangala kaaraNanaE

துதி-தங்கிய பூரணனே, நரர்

thuthi thangiya pooraNanaE narar

வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த

vaazha viN thuranthOr yEzhaiyaai pirantha

வண்மையே தாரணனே!

vaNmaiyaE thaaraNanaE


மதி-மங்கின எங்களுக்கும்,

mathi mangina engaLukkum

திதி-சிங்கினர் தங்களுக்கும்

thithi singinar thangaLukkum

உனின் மாட்சியும் திவ்விய காட்சியும்

unin maatchiyum divviya kaatchiyum

தோன்றிட வையாய் துங்கவனே — அதி-மங்கல

thOntrida vaiyaai thungavanaE


முடி-மன்னர்கள் மேடையும்,

mudi mannarhaL mEdaiyaiyum

மிகு-உன்னத வீடதையும் -எண்ணா 

mihu unnatha veedathaiyum -eNNaa

மாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ,

maattidaiyaE piranth thaattidaiyar thozha

வந்தனையோ தரையில்? — அதி-மங்கல

vanthanaiyO tharaiyil


தீய-பேய்த்திரள் ஓடுதற்கும்,

theeya pEi thiraL Odutharkum

உம்பர்-வாய்திரள் பாடுதற்கும், உனைப்

umbar vaaithiraL paadutharkum -unai

பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்தற்கும்

pinpatruvOr mutrum thunputru vaazhtharkum

பெற்ற நற்கோலம் இதோ? — அதி-மங்கல

petra nar kOlam ithO