AthisayangaL seiyhiravar nam aruhil irukkiraar | அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்

அதிசயங்கள் செய்கிறவர் நம்

athisayangaL seiyhiravar nam

அருகில் இருக்கிறார்

aruhil irukkiraar                       (2)

அற்புதங்கள் செய்கிறவர் என்றும்

arputhangaL seiyhiravar entrum

நமக்குள் வசிக்கிறார் 

namakkuL vasikkiraar


தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் -2

thaNNeerai raththamaai maatrinaar athisayam

  வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் 

  verum thaNNeerai thiraatchai rasamaai

  மாற்றினார் அதிசயம் -2 -அதிசயங்கள் 

  maatrinaar athisayam


செங்கடலை இரண்டாக பிளந்திட்டார் அதிசயம் -2

sengkadalai iraNdaaha piLanthittaar athisayam

  புயல் காற்றையும் தம் வார்த்தையாலே

  puyal kaatraiyum tham vaarththaiyaalaE

  அடக்கினார் அதிசயம் -2 -அதிசயங்கள் 

  adakkinaar athisayam


குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம்  -2

kurudarukkum sevidarukkum sugam thanthaar athisayam

  ஒரு சொல்லாலே மரித்தோரை

  oru sollaalaE mariththOrai

  எழுப்பினார் அதிசயம் -2 -அதிசயங்கள் 

  ezhuppinaar athisayam


பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம் –2

paaviyaana ennaiyum uyarththinaar athisayam

 ஏழை என் மீது நேசக்கரம் 

 yEzhai en meethu nEsak karam

 நீட்டினார் அதிசயம் -2 -அதிசயங்கள் 

  neettinaar athisayam