uyaramum unnathamumaana | உயரமும் உன்னதமுமான

உயரமும் உன்னதமுமான
uyaramum unnathamumaana
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் -2
singaasanaththil veetirukkum
  சேனைகளின் கர்த்தராகிய
  sEnaihaLin karththaraahiya
  ராஜாவை என் கண்கள் காணட்டும்
  raajaavai en kaNhaL kaaNattum

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் - 8
sEnaihaLin karththar parisuththar
  பரிசுத்தர் பரிசுத்தரே - 2
  parisuththar parisuththaraE

ஒருவராய் சாவாமையுள்ளவர் இவர் 
oruvaraai saavaamaiyuLLavar ivar
சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர்  -2
sErakkoodaa oLithanil vaasam seipavar
  அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்
  ahilaththai vaarththaiyaal sirushtiththavar
  இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் -2 -சேனைகளின்
  yEsuvaE ummaiyaE aaraathippaEn

ஆதியும் அந்தமுமானவர் இவர் 
aathiyum anthamumaanavar ivar
அல்பாவும் ஒமேகாவுமானவர் இவர்  -2
alpaavum omEhaavum aanavar ivar
  இருந்தவரும் இருப்பவரும்
  irunthavarum iruppavarum
  சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் -2 -சேனைகளின்
  seekkiram varappOgum raaja ivar

எல்லா நாமத்திலும் மேலானவர்
ellaa naamaththilum mElaanavar
முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் -2
muzhangkaalhaL mudangidum ivarukku mun
  துதிகனம் மகிமைக்கு பாத்திரரே
  thuthi gana mahimaikku paaththiraraE
  தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன் -2 -சேனைகளின்
  thooyavar yEsuvai uyarththiduvaEn