Anbar en nEsaraE ummaNdaiyil | அன்பர் என் நேசரே உம் அண்டையில்

அன்பர் என் நேசரே உம் அண்டையில்
anbar en nEsaraE um aNdaiyil
இன்பமாக உந்தன் பாதையோட-2
inbamaaha unthan paathaiyOda
  நீரே வழியும், சத்தியமும்
  neeraE vazhiyum saththiyamum
  ஜீவனுமே-2
  jeevanumaE 

துன்ப பெருக்கிலே சோர்ந்திடேனே
thunba perukkilaE sOrnthidaEnaE
அன்பர் அறியாமல் வந்திடாதே – 2
anbar ariyaamal vanthidaathaE
  கண்மணிபோல் நீர் காத்திடுவீர் கனிவுடன் – 2
  kaNmaNipOl neer kaaththiduveer kanivudan

சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
sutrilum saththuru soozhnthidinum
வியாகுலம் என்னை விரட்டிடினும் -2
viyaahulam ennai virattidinum
  ஆ..நேசரே உம் இன்ப சத்தம் ஈந்துடுவீர் -2
  aa.. nEsaraE um inba saththam yeenthiduveer

ஈன சிலுவையில் ஏறிட்டீரோ?
yeena siluvaiyil yEritteerO
எந்தனுகாய் கஷ்ட பட்டிட்டீரோ?-2
enthanukkaai kashta pattitteerO
  துன்பம் மூலமாய்
  thunbam moolamaai
  ஏறிடுவேன் இன்ப கானான்-2
  yEriduvaEn inba kaanaan

சொந்த ஜீவனை நீர் என்னில் ஈந்து 
sontha jeevanai neer ennil yeenthu
அன்பில் இணைத்தீரே  வல்லமையால்-2
anbil iNaiththeeraE vallamaiyaal
  எந்தன் ஜீவனை
  enthan jeevanai
  மற்றோருக்காய் ஈந்திடவே-2
  matrOrukkaai yeenthidavaE

மாயையான இந்த லோஹமதில்
maayaiyaana intha lOhamathil
மாய்ந்தழியும் இம்-மாந்தர் அன்பு-2
maainthazhiyum immaanthar anbu
  நேற்றும் இன்றென்றும்
  nEtrum intrentrum
  மாறிடீரே  என் நேசரே-2
  maarideeraE  en nEsaraE

வஞ்சனை-யான இப்பார்தலாமே 
vanjanaiyaana ip paarthalamaE
வஞ்சிக்குமே மிக தந்திரமாய் – 2
vanjikkumaE miha thanthiramaai
  வாஞ்சித்திடேனே
  vaanjiththidEnaE
  மோசமான இப்பார்தலாதை -2
  mOsamaana ip paarthalaththai