Nantri balihaL seluththiyaE naangaL |நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்

நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்
nantri balihaL seluththiyaE naangaL
ஆலயம் கூடி வந்தோம்
aalayam koodi vanthOm
துதி பலிகள் செலுத்தியே நாங்கள்
thuthi balihaL seluththiyaE naangaL
உம்மை போற்ற வந்தோம் 
ummai pOtra vanthOm

கர்த்தர் செய்த நன்மைக்காக
karththar seiytha nanmaikkaaha
நன்றி செலுத்த வந்தோம்
nantri seluththa vanthOm
நம்மை மறவா அவர் கிருபை
nammai maravaa avar kirubai
எண்ணியே துதிக்க வந்தோம்
eNNiyaE thuthikka vanthOm

உடன்படிக்கை எனக்குத் தந்து
udanpadikkai enakku thanthu
உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர்
unthanin piLLaiyaai therintheduththeer
மரணத்தின் விளிம்பில் நின்ற என்னை
maraNaththin viLimbil nintra ennai
ஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர் -கர்த்தர் 
jeevanin paathaiyil thiruppi vitteer

வாதைகள் என்னை சூழ்ந்தபோது
vaathaihaL ennai soozhntha pOthu
செட்டைகளாலே எனை மறைத்தீர்
settaihaLaalaE enai maraiththeer
பாதைகள் எல்லாம் காக்கும்படி
paathaihaL ellaam kaakkum padi
தூதர்கள் அனுப்பி உதவி செய்தீர் -கர்த்தர் 
thootharhaL anuppi uthavi seiytheer

தேவைகள் நெருக்கி நின்றபோது
thEvaihaL nerukki nintra pOthu
அற்புதமாகப் பெருக வைத்தீர்
arputhamaaha peruha vaiththeer
கண்ணீரின் பாதையில் திகைத்தபோது
kaNNeerin paathaiyil thihaiththa pOthu
கண்மணியே என்று என்னை அழைத்தீர் -கர்த்தர் 
kaNmaNiyaE entru ennai azhaiththeer