dEvanin patchamaai vanthiduvOm | தேவனின் பட்சமாய் வந்திடுவோம்

தேவனின் பட்சமாய் வந்திடுவோம் 
dEvanin patchamaai vanthiduvOm
தேவாதி தேவனைப்  பணிந்திடுவோம் -2
dEvaathi dEvanaip paNinthiduvOm
 வல்லமையானவர் என்றென்றும் நம்மைக் 
 vallamaiyaanavar entrentrum nammai
 கருத்துடன் காத்திட்டாரே -2
  karuththudan kaaththittaaraE

அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் 
allEluyah aarpparippOm
ஆனந்திப்போம் அகமகிழ்வோம் -2
aananthippOm ahamahizhvOm
  அல்லைகள் தொல்லைகள் ஒன்றுமில்லை 
  allaihaL thol;laihaL ontrumillai
  அழைத்தவர் உன்னை நடத்திடுவார் -2
  azhaiththavar unnai nadaththiduvaar

வனாந்திரத்தில் மோசே சந்தித்தவர் 
vanaanthiraththil mOsaE santhiththavar
பட்சமாய் பேசி அழைத்திட்டவர் -2
patchamaai pEsi azhaiththittavar
  பார்வோனையும் படை வீரனையும் 
  paarvOnaiyum padai veeranaiyum
  கடலிலே தள்ளிட்டவர் -2 -அல்லேலூயா
  kadalilaE thaLLittavar

தானியேலைக் காத்த தேவனவர் 
thaaniyaElaik kaaththa dEvanavar
சிங்கத்தின் வாயைக் கட்டியவர் -2
singaththin vaayai kattiyavar
  தேவாதி தேவன் ராஜாதி ராஜன் 
  dEvaathi dEvan raajaathi raajan
  உன்னையும் காத்திடுவார் -2 -அல்லேலூயா
  unnaiyum kaaththiduvaar

மண்ணுலகில் அவர் போலுண்டோ 
maNNulahil avar pOluNdO
மகத்துவமானவர்  அவர் பெயரே -2
mahaththuvamaanavar avar peyaraE
  மாறாத தேவன் மகிமையின் ராஜன் 
  maaraatha dEvan mahimaiyin raajan
  வேகமே வந்திடுவார் -2 -அல்லேலூயா
  vEhamaE vanthiduvaar



Song Arrangement (Ronald)
==============================
Time: 4/4

1                                   4                 2
dEvanin patchamaai vanthiduvOm
5                                 4                  1
dEvaathi dEvanaip paNinthiduvOm
 1                2            
 vallamaiyaanavar entrentrum nammai
  4                 5      1
  karuththudan kaaththittaaraE

1         2    
allEluyah aarpparippOm
6       4             1
aananthippOm ahamahizhvOm
  1                    2
  allaihaL thollaihaL ontrumillai
  5                              1
  azhaiththavar unnai nadaththiduvaar